#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனது தனித்திறமையால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன் மூலம் சினிமாவில் நுழைந்தார்.
ஆரம்பத்தில் காமெடி கதையம்சம் கொண்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் பின்னர் சிறிது சிறிதாக கமர்சியல் படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது தீபாவளியை முன்னிட்டு இவர் நடித்த அமரன் திரைப்படம் வெளியாகி மாபெரும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது.
இந்திய ராணுவத்தில் பணியாற்றிய மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக ஆனது. இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்ச்சர்ஸ் தயாரித்திருக்கிறது. தற்போது இந்த திரைப்படத்தின் மொத்த வசூல் என்ன லாபம் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
அமரன் திரைப்படம் மொத்தமாக 110 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. சிவகார்த்திகேயன் சம்பளம் 20 கோடி சாய் பல்லவியின் சம்பளம் 2 கோடி ராஜ்குமார் பெரியசாமிக்கு 2 கோடி இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமாருக்கு 3.5 கோடி சம்பளம் கொடுத்து இருக்கிறார்கள். படம் வெளிவரும் முன்னரே டிஸ்ட்ரிபியூட்டர்கள் மற்றும் சாட்டிலைட் ரைட் டிஜிட்டல் ரைட்ஸ் மியூசிக் ரைட்ஸ் போன்றவற்றின் மூலமாகவே மொத்த வசூல் 117 கோடியை எட்டி இருக்கிறது. அப்பவே 7 கோடி லாபத்தை பெற்றிருக்கிறது அமரன் திரைப்படம்.
பிறகு படம் வெளியாகி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட ஆறு ஏழு வாரங்களையும் தாண்டி இன்னும் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் மொத்த வசூல் 361 கோடியாகும். சிவகார்த்திகேயனை வைத்து கமலஹாசன் தனது ராஜ்குமார் ஃபிலிம் இன்டர்நேஷனல் மூலம் தயாரித்த அமரன் திரைப்படத்தின் மூலமாக அவருக்கு கிடைத்த லாபம் மற்றும் 110 கோடி ஆகும். இதனால் இவர் நல்ல லாபத்தை பார்த்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…