#image_title
இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் ஓவியர் ஒருவரை அழைத்து பெருமைப்படுத்திய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தனது சிறப்பான நடிப்பால் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் அதையும் தாண்டி தன்னுடைய உதவும் குணத்தால் மிகப்பெரிய புகழை எட்டி இருக்கின்றார். தமிழில் உழைப்பாளி என்ற திரைப்படத்தின் மூலமாக டான்ஸ் அசிஸ்டன்ட்டாக பணியாற்றி வந்த இவர் தற்போது முன்னணி ஹீரோவாகவும் இயக்குனராகவும் அசத்தி வருகின்றார்.
டான்ஸ் அசிஸ்டன்டில் இருந்து டான்ஸ் மாஸ்டர் அதை எடுத்து ஹீரோ பின்னர் இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட இவர் ஆரம்ப கால முதலே தான் சம்பாதிக்கும் பணத்தில் ஏழை எளிய குழந்தைகள் வயதான முதியவர்கள் என பலருக்கும் உதவி செய்து வருகின்றார். பல மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்து வளத்து வந்த இவர் அவர்களுக்காக யாரிடமும் உதவி கேட்க தயங்குவதில்லை.
மிகப் பெரிய பணக்காரர்கள் கூட உதவி செய்ய யோசிக்கும் நிலையில் டான்ஸ் அசிஸ்டன்டாக பணியாற்றிய நாள் முதலே உதவி செய்யும் இவரின் குணத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். தற்போது உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி மாற்றம் என்ற அறக்கட்டளையே தொடங்கி அதில் பலரையும் இணைத்துக் கொண்டு மேலும் பல மக்களுக்கு உதவி செய்து வருகின்றார். இதன் மூலம் பலரும் பயனடைந்து வருகிறார்கள்.
தனது உதவியை நிறுத்தாமல் செய்து கொண்டிருக்கும் ராகுவாலாரன்ஸ் தற்போது ஒரு ஓவியரை அழைத்து பெருமைப்படுத்தி இருக்கின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தாம்பூல தட்டின் கீழ் மார்க்கரை வைத்து அதில் ஆரத்தி எடுத்துக் கொண்டே ஓவியர் ஒருவர் ராகவா லாரன்ஸின் படத்தை வரைந்து இருக்கின்றார். மேலும் அதன் மூலம் அவரை பார்க்க ஆசைப்படுவதாக கூறியிருக்கின்றார்.
இதை பார்த்த ராகவா லாரன்ஸ் அவரை வீட்டிற்கு அழைத்து கௌரவப்படுத்தினார் .மேலும் அந்த ஓவியர் ராகவா லாரன்ஸுக்கு ஒரு பரிசையும் வழங்கியிருந்தார். அதையடுத்து சிறிது பணத்தை ராகவா லாரன்ஸ் அந்த ஓவியருக்கு கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டார். எனக்கு பணம் எல்லாம் தேவையில்லை உங்கள் அன்பு மட்டும் போதும் என்று கூறினார். ராகவா லாரன்ஸ் நீங்கள் திருமணம் கூட செய்யாமல் உங்களது தாய் தந்தைகளை பார்த்து வருவதாக கேள்விப்பட்டேன்.
அவர்களுக்கு இந்த பணம் உதவியாக இருக்கும். மேலும் வசதி இல்லாமல் வரைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த பணத்தை வைத்து இலவசமாக உங்களின் கலையை கற்றுக்கொடுங்கள். அது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ மனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…
குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை,…
நலன் காக்கும் ஸ்டாலின்" திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இலவச…
சென்னை மாவட்டத்தில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(42) என்பவருடைய மகள் சூரிய பிரியா (17). இவர்…
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க…