Categories: சினிமா

நீங்க மட்டும் இல்லன்னா நான் ஜீரோ.. கல்கி 2898 Ad படத்தின் வெற்றி.. பிரபாஸ் வெளியிட்ட வீடியோ..!

Spread the love

கல்கி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பிரபாஸ் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவான திரைப்படம் கல்கி 2898 ad. இந்த திரைப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க கமலஹாசன், அமிதாபச்சன், தீபிகா படுகோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகிய மக்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றிருந்தது. இரண்டு வாரங்களிலேயே இந்த திரைப்படம் 1000 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.

600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது ஆயிரம் கோடியை கடந்து வசூலில் சாதனை படைத்து வருவதால் பட குழுவினர் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். இந்த படத்தில் நடித்திருந்த அனைவருமே தனது காட்சிகளை சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அமிதாப்பச்சனின் நடிப்பு இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கின்றது.

கமலஹாசன் இந்த திரைப்படத்தில் ஒரு சில நிமிடங்கள் வந்தாலும் இரண்டாவது பகுதியில் தான் எனக்கு வேலை அதிகம் என்று அவரே சமீபத்தில் கூறியிருந்தார். சயின்ஸ் பிக்சன் மற்றும் இதிகாச கதைகளத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படம் இயக்குனர் நாக் அஸ்வினுக்கு ஐந்து வருட காத்திருப்புக்கு கிடைத்த பலன். ஒவ்வொரு காட்சியையும் இயக்குனர் இப்படத்தில் செதுக்கி இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

இது படத்தின் வெற்றிக்கு அது மிகப்பெரிய அளவில் கை கொடுத்துள்ளது. இப்படத்தின் இரண்டாவது பாகம் வரை 2026 ஆம் ஆண்டு வெளியாகும் என கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்திருந்தது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றது வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம்.

இந்த வீடியோவில் நடிகர் பிரபாஸ் தெரிவித்ததாவது “நாக் அஸ்வின் மற்றும் அவரின் ஐந்து வருட உழைப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது. ரசிகர்களின் அன்பிற்கு மிகுந்த நன்றி. ரசிகர்கள் இல்லாவிட்டால் நான் ஜீரோ. இந்த படத்திற்கு காரணமான தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை காட்டிலும் இரண்டாவது பாகம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தார். மேலும் இந்த வீடியோவில் படத்தின் மேக்கிங் காட்சிகளும் இணைக்கப்பட்டிருந்தது.

Mahalakshmi

Recent Posts

ஜனநாயகம் லீக் விவகாரம்… “இவங்க தான் காரணம்… விஜய்க்கு சம்மந்தம் இல்லை”… சனம் ஷெட்டி போட்டு உடைத்த ரகசியம்…!!!

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

4 minutes ago

“அண்ணன் சொல்லிட்டாரு.. தங்கச்சி முடிச்சுட்டாங்க”… நாடாளுமன்றத்தில் திமுகவின் ‘தர்மயுத்தம்’ ஆரம்பம்… ஸ்டாலின் எடுத்த விஸ்வரூபம்…!

மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…

11 minutes ago

“விஜய்யின் காலில் விழுந்து கதறினேன்.. எல்லாவற்றிற்கும் இவர்தான் காரணம்”…. திமுகவில் இணைந்த அஜிதா ஆக்னல் பரபரப்பு புகார்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

17 minutes ago

பகீர்!… சொந்தப் பேத்தியையே சீரழித்த தாத்தா!… காமவெறி முதியவருக்கு 61 ஆண்டு சிறை தண்டனை… சிவகங்கை நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு…!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…

20 minutes ago

BIG BREAKING: ‘ஜனநாயகன்’ திரைப்படம்…. சற்றுமுன் கோர்ட் அதிரடி உத்தரவு.. விஜய்க்கு மகிழ்ச்சி…!

சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…

30 minutes ago

இந்தியாவுக்கு பலத்த அடி!… “இனி ஒரு சொட்டு கூட கிடையாது”… ரஷ்யா, ஈரானுக்கு அமெரிக்கா போட்ட ரெட் கார்டு… கதிகலங்கிய உலக நாடுகள்…!!!

மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…

35 minutes ago