Categories: சினிமா

இந்த மனசு யாருக்கு சார் வரும்.. ஓவியரை அழைத்து கௌரவப்படுத்தி, பண உதவி செய்த ராகவா லாரன்ஸ்.. வைரலாகும் வீடியோ..!

Spread the love

இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் ஓவியர் ஒருவரை அழைத்து பெருமைப்படுத்திய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் தனது சிறப்பான நடிப்பால் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் அதையும் தாண்டி தன்னுடைய உதவும் குணத்தால் மிகப்பெரிய புகழை எட்டி இருக்கின்றார். தமிழில் உழைப்பாளி என்ற திரைப்படத்தின் மூலமாக டான்ஸ் அசிஸ்டன்ட்டாக பணியாற்றி வந்த இவர் தற்போது முன்னணி ஹீரோவாகவும் இயக்குனராகவும் அசத்தி வருகின்றார்.

டான்ஸ் அசிஸ்டன்டில் இருந்து டான்ஸ் மாஸ்டர் அதை எடுத்து ஹீரோ பின்னர் இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட இவர் ஆரம்ப கால முதலே தான் சம்பாதிக்கும் பணத்தில் ஏழை எளிய குழந்தைகள் வயதான முதியவர்கள் என பலருக்கும் உதவி செய்து வருகின்றார். பல மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்து வளத்து வந்த இவர் அவர்களுக்காக யாரிடமும் உதவி கேட்க தயங்குவதில்லை.

மிகப் பெரிய பணக்காரர்கள் கூட உதவி செய்ய யோசிக்கும் நிலையில் டான்ஸ் அசிஸ்டன்டாக பணியாற்றிய நாள் முதலே உதவி செய்யும் இவரின் குணத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். தற்போது உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி மாற்றம் என்ற அறக்கட்டளையே தொடங்கி அதில் பலரையும் இணைத்துக் கொண்டு மேலும் பல மக்களுக்கு உதவி செய்து வருகின்றார். இதன் மூலம் பலரும் பயனடைந்து வருகிறார்கள்.

தனது உதவியை நிறுத்தாமல் செய்து கொண்டிருக்கும் ராகுவாலாரன்ஸ் தற்போது ஒரு ஓவியரை அழைத்து பெருமைப்படுத்தி இருக்கின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தாம்பூல தட்டின் கீழ் மார்க்கரை வைத்து அதில் ஆரத்தி எடுத்துக் கொண்டே ஓவியர் ஒருவர் ராகவா லாரன்ஸின் படத்தை வரைந்து இருக்கின்றார். மேலும் அதன் மூலம் அவரை பார்க்க ஆசைப்படுவதாக கூறியிருக்கின்றார்.

இதை பார்த்த ராகவா லாரன்ஸ் அவரை வீட்டிற்கு அழைத்து கௌரவப்படுத்தினார் .மேலும் அந்த ஓவியர் ராகவா லாரன்ஸுக்கு ஒரு பரிசையும் வழங்கியிருந்தார். அதையடுத்து சிறிது பணத்தை ராகவா லாரன்ஸ் அந்த ஓவியருக்கு கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டார். எனக்கு பணம் எல்லாம் தேவையில்லை உங்கள் அன்பு மட்டும் போதும் என்று கூறினார்.  ராகவா லாரன்ஸ் நீங்கள் திருமணம் கூட செய்யாமல் உங்களது தாய் தந்தைகளை பார்த்து வருவதாக கேள்விப்பட்டேன்.

அவர்களுக்கு இந்த பணம் உதவியாக இருக்கும். மேலும் வசதி இல்லாமல் வரைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த பணத்தை வைத்து இலவசமாக உங்களின் கலையை கற்றுக்கொடுங்கள். அது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ மனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

14 minutes ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

19 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

24 minutes ago

ரூ.1.45 கோடி கார்ப்பரேட் வேலையை தூக்கி எறிந்த பெண்… 4 மாத நாய் நடைப்பயிற்சி தந்த மாபெரும் மாற்றம்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…

41 minutes ago

அய்யய்யோ… யாரும் பாக்கலன்னு நினைச்சியாடா?… பட்டப்பகலில் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு… மஹிந்திரா தார் டயரை தூக்கிய நபர்… CCTV-யில் சிக்கிய வீடியோ வைரல்…!!

ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…

43 minutes ago