சற்றுமுன்: ராகவா லாரன்ஸ் அறிவித்தார்… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…. அவரே வெளியிட்ட ரகசியம்…!

By Nanthini on ஆனி 14, 2026

Spread the love

நடிகர் ராகவா லாரன்ஸ் விரைவில் அரசியலில் களமிறங்குவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது ரசிகர்கள் நீண்டநாட்களாக அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருவதாகவும், இதுகுறித்த முறையான அறிவிப்பை விரைவில் தனது தாயாரின் முன்னிலையில் வெளியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழக அரசின் ஒருமாத கால ஆட்சி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகப் பாராட்டினார். குறிப்பாக, பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே அமைந்திருந்த மதுக்கடைகளை அதிரடியாக மூடிய முடிவும், அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் ரமேஷ் ஆகியோரின் சுறுசுறுப்பான செயல்பாடுகளும் தன்னை வெகுவாகக் கவர்ந்ததாக லாரன்ஸ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.