தமிழ் சினிமாவில் பார்த்தாலே பரவசம் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் ராகவா லாரன்ஸ். இதற்கு முன்னதாக பல திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கின்றார். தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்து வரும் ராகவா லாரன்ஸ் நடிப்பை தாண்டி பல நல்ல விஷயங்களையும் செய்து வருகின்றார். கடந்த ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து எஸ்ஜே சூர்யாவும் நடித்திருப்பார்.
இப்படம் மக்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ராகவா லாரன்ஸ் கைவசம் பல படங்களை வைத்திருக்கின்றார். லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து ஹண்டர் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார்.
தற்போது அறிமுக இயக்குனரான துரை செந்தில் இயக்கத்தில் அதிகாரம் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தின் திரைக்கதையை வெற்றிமாறன் எழுதியிருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் தலைவர் 171 திரைப்படத்திலும் ராகவா லாரன்ஸ் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.