இந்த புகைப்படத்தில் தனது அம்மாவுடன் இருக்கும் குழந்தை தமிழ் சினிமா மற்றும் சீரியலை ஆண்ட பிரபல நடிகை என்பது உங்களுக்கு தெரியுமா..?

By admin on ஆவணி 21, 2024

Spread the love

சோசியல் மீடியாவில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாகும். அந்த வகையில் ஒரு குழந்தை தனது அம்மாவிடம் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அது வேறு யாருமில்லை பிரபல நடிகை ராதிகா சரத்குமார். ராதிகா சரத்குமார் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

   

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், மோகன் உள்ளிட்டோருடன் ராதிகா ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

   

 

ராதிகா இன்று போய் நாளை வா, மூன்று முகம், பூந்தோட்ட காவல்காரன், கிழக்கு சீமையிலே, வீரபாண்டியன், தாவணி கனவுகள், கேளடி கண்மணி, சூரிய வம்சம், அமர்க்களம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரைகளும் ராதிகா சிறப்பாக செயல்பட்டுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி, சந்திரகுமாரி உள்ளிட்ட சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.

விருதுநகா் பாஜக வேட்பாளா் ராதிகா சரத்குமாா்

வெள்ளித்திரைகளும் சரி சின்னத்திரையிலும் சரி ராதிகா சரத்குமார் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். நடிகர் சரத்குமாரை கடந்த 2001-ஆம் ஆண்டு ராதிகா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். ராதிகாவின் சிறு வயது புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் சிறு வயதிலும் ராதிகா இவ்வளவு க்யூட்டாக இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

எனக்கு இது இன்னொரு கேரியர்! -'கோடீஸ்வரி' ராதிகா சரத்குமார் உற்சாகம் |  radhika about kodeeswari - hindutamil.in