CINEMA
நிறைமாத நிலவே வா வா.. நடிகை ரித்திகாவுக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு.. வைரலாகும் போட்டோஸ்..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். நடிகை ரித்திகா ராஜா ராணி சீரியல் மூலம் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்தது. ஆனாலும் மனதிற்கு பிடித்த கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதில் ரித்திகா உறுதியாக இருந்தார். பாக்கியலட்சுமி சீரியலில் விஜே விஷால் ஜோடியாக அம்ருதா கதாபாத்திரத்தில் ரித்விகா நடித்தார்.
ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் அம்ரித்தா எப்படி எழில் வாழ்க்கைக்குள் நுழைகிறார். எழிலுக்கும் அம்ரித்தாவுக்கும் திருமணம் நடந்து முடிந்த நிலையில் அவர்களை குடும்பத்தில் அனைவரும் ஏற்றுக் கொள்கிறாரா? என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோதே குக் வித் கோமாளி சீசன் மூன்று நிகழ்ச்சியில் ரித்திகா பங்கேற்கிறார்.
பாலாவுடன் சேர்ந்து ரித்திகா செய்யும் அரட்டைகள் ரசிகர்கள் கவரும் விதமாக இருக்கும். ஒரு சில வாரங்கள் மட்டுமே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரித்திகா பங்கேற்றார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த ஆண்டு ரித்திகா தனது காதலர் வினு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு சீரியலில் இருந்து ரித்திகா விலகிவிட்டார்.
ஆனால் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாகவே இருப்பார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதை ரித்திகா அறிவித்தார். இந்த நிலையில் ரித்திகாவுக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடந்து முடிந்தது. ரித்திகா தனது வளைகாப்பு விழாவில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ரித்திகாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீதேவி அசோக், தர்ஷிகா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ரித்திகாவுக்கு நலங்கு வைத்து வாழ்த்தி உள்ளனர்.