CINEMA
கொட்டுக்காளி படத்தை பார்த்துவிட்டு கமலஹாசன் செய்த மிகப்பெரிய விஷயம்.. நெகிழ்ச்சியில் பட குழுவினர்..!!
தமிழ் சினிமாவில் காமெடியனாக தனது பயணத்தை ஆரம்பித்து இப்போது ஹீரோவாக வலம் வருபவர் சூரி. சூரி ஹீரோவாக நடித்த விடுதலை, கருடன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இப்போது வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான கொட்டுக்காளி திரைப்படத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். வருகிற 23-ஆம் தேதி கொட்டுக்காளி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. முன்பே பல விருது மேடைகளில் கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டு பாராட்டுகளை குவித்துள்ளது.
இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் படத்தை பார்த்துவிட்டு பட குழுவினரை பாராட்டியுள்ளார். மேலும் கமல்ஹாசன் கொட்டுக்காளி என்ற மத்திய அரசு சான்றிதழ் திரையில் தோன்றும் கணத்திலிருந்து ஆச்சரியங்கள் தொடங்குகிறது. அந்த சான்றிதழில் 103 நிமிடங்கள் 44 செகண்டுகள் என்று குறிப்பை பார்த்ததுமே தமிழ் சினிமா ராக்கூத்து யுகத்தில் இருந்து மீண்டு நவீன கதை சொல்லி ஒருவனின் களமாகிவிட்டது புரிகிறது. தம்பி சூரியை தவிர எனக்கு தெரிந்த முகங்கள் இல்லை. மூன்று நிமிடங்களுக்கு பிறகு அவரும் தெரியவில்லை. பாண்டியன் என்னும் கதாபாத்திரம் தான் தெரிந்தார்.
காலில் கல் கட்டிய சேவல் ஒன்று விடியலுக்காக கூட கூவாமல் குழம்பி நிற்கிறது. மறுபுறம் நம் கண்ணுக்கு தெரியாத கல் ஒன்று காலில் கட்டப்பட்ட பெண் ஒருத்தி அந்த சேவலையே விரித்து பார்க்கிறாள். கொட்டுக்காளி டைட்டில் திரையில் கண் இமைக்கும் நேரத்தில் கால் கட்டை உதறி தப்பிக்கிறது. சேவல் வெறித்து பார்த்த பெண்ணின் கண்ணில் ஒரு சின்ன எதிர்பார்ப்பு. பின்பு இரு உறவினர்கள் சேவலை துரத்தி பிடித்துக் கொண்டு போகிறார்கள். பெண்ணின் கண்ணில் நம்பிக்கை மங்குகிறது. இவள் தான் நாயகி. உலகத்தை தலைகீழாக அண்ணாந்து பார்த்தபடி அறிமுகம் ஆகிறான் பாண்டி. அவன் கழுத்தில் ஒரு பெண் சுண்ணாம்பு களியை தடவி விடுகிறாள்.
அது பாண்டிக்கு தொண்டை கட்டாகவும் இருக்கலாம் அல்லது புற்றுநோயின் ஆரம்ப கட்டமாக கூட இருக்கலாம். ஒரு இளம் பெண்ணின் கல்லூரி காதலையும் கேன்சரையும் எந்த ஒரு புரிதலும் இல்லாத அணுகும் ஒரு கிராமத்து குடும்பம். மொத்தத்தில் கொட்டுக்காளி பட குழுவினர் அழகாக சினிமா மொழியில் அற்புதமான பகுத்தறிவு கதை ஒன்று சொல்லியிருக்கிறார்கள். அதற்காக இயற்கைக்கு மட்டுமல்ல திரு சிவகார்த்திகேயனுக்கும் நன்றி என கமல்ஹாசன் கூறியுள்ளார். கமல்ஹாசன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது. உலக நாயகன் கமல்ஹாசனே பாராட்டியதால் கொட்டுக்காளி படக் குழுவினர் குஷியில் உள்ளனர்.
A moment to cherish for our team #Kottukkaali. Appreciation from the pioneer of Indian cinema, our Ulaganayagan @ikamalhaasan Sir.
This letter is a treasure.Thank you so much Sir. 🙏🙏❤️❤️ pic.twitter.com/uoCNkTYA1C
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 21, 2024