நாளை முதல் நாடெங்கும்.. தளபதி விஜய் வெளியிட்ட அறிக்கை.. குஷியில் ரசிகர்கள்..!!

By admin on ஆவணி 21, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. தனது 69-ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் முழு நேரமாக ஈடுபட போவதாக விஜய் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார்.

   

வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட உள்ளது. உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாநாடு என அடுத்தடுத்த பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அடுத்த மாத இறுதியில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. முன்பாக விஜய் தனது கட்சி கொடியை அறிமுகம் செய்ய உள்ளார். இந்த நிலையில் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

   

 

அதில் கூறியிருப்பதாவது என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே.. சரித்திரத்தின் புதிய திசையாகவும், புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள் ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.

தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப்போகும் நம் வீர கொடியை, வெற்றி கொடியை நாளை நம் தலைமை நிலைய செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழக கொடி பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதை பெரும் மகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை 9.15 மணி முதல் சென்னை பனையூரில் இருக்கும் தலைமை நிலைய செயலகத்தில் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்த உள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.