CINEMA
தவசி பட ஷூட்டிங்கில் நடிக்க வேண்டாம் என்று சொன்ன விஜயகாந்த்… மன்னிப்பு கேட்ட சௌந்தர்யா…
1990 மற்றும் 2000 ஆரம்ப காலகட்டங்களில் மிகப் பிரபலமாக இருந்தவர் நடிகை சௌந்தர்யா. இவர் கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்தவர். தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்தவர் சௌந்தர்யா.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய படங்களை ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார் சௌந்தர்யா. தமிழில் 1995 ஆம் ஆண்டு பொன்னுமணி படத்தில் நடித்து அறிமுகமானார் சௌந்தர்யா. பின்னர் 1997 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக அருணாச்சலம் திரைப்படத்தில் நடித்தார் சௌந்தர்யா. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக இருந்தது.
பின்னர் படையப்பா, காதலா காதலா, முத்துக்காளை, மன்னவர், தவசி, சொக்கத்தங்கம் ஆகிய திரைப்படங்களில் ரஜினிகாந்த், கமலஹாசன், கார்த்திக், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து பிரபலமானார் சௌந்தர்யா. தனது வசீகரிக்கும் முகத்தினாலும் நடிப்பினாலும் ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தார் சௌந்தர்யா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சௌந்தர்யா 2004 ஆம் ஆண்டு ஒரு விமான விபத்தில் மரணம் அடைந்தார். அவர் இறுதியாக தமிழில் விஜயகாந்த்க்கு ஜோடியாக தவசி மற்றும் சொக்கத்தங்கம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். சொக்கத்தங்கம் திரைப்படமே தமிழில் சௌந்தர்யாவின் கடைசி திரைப்படம் ஆகும்.
தவசி திரைப்படத்தில் தான் முதன்முதலாக விஜயகாந்துக்கு ஜோடியாக நடிக்க சௌந்தர்யா கமிட்டாகி இருந்தார். அப்போது விஜயகாந்தை பற்றி யாரோ தவறாக அவரிடம் கூறியிருக்கிறார்கள். விஜயகாந்த் அவர்கள் செட்டில் மிகவும் கோபப்படுவார் என்று கூறியிருக்கிறார்கள். அதனால் விஜயகாந்துடன் நடிப்பதற்கு மிகவும் பயந்தாராம் சௌந்தர்யா. படத்தில் ஏன் கமிட் ஆனோம் என்று நினைத்தாராம். இந்த செய்தியை அறிந்த விஜயகாந்த், இயக்குனரிடம் ஒரு நாலு நாள் சௌந்தர்யாவ சூட்டிங் ஸ்பாட்டில் வந்து சும்மா இருக்க சொல்லுங்க நடிக்க வேண்டாம் எதுவும் செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
அதன்படி இயக்குனர் கூற சௌந்தர்யா சூட்டிங் ஸ்பாட்டில் வந்து சும்மா உட்கார்ந்திருக்கிறார். அப்போது விஜயகாந்த் அங்குள்ள தொழிலாளர்களிடம் பேசும் விதத்தையும் நடந்து கொள்ளும் விதத்தையும் பார்த்து அவர் எப்படிப்பட்ட மனிதர் என்று தெரிந்து கொண்ட சௌந்தர்யா பின்னர் விஜயகாந்திடம் தவறாக எண்ணிவிட்டதை நினைத்து மன்னிப்பு கேட்டு உள்ளார்.