“ஐயோ காப்பாத்துங்க… தடியால் அடித்தும் விடலையே…” பழ வியாபாரியை கொடூரமாகக் கடித்துக் குதறிய வெறிநாய்… பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!

By Swetha on ஆவணி 14, 2026

Spread the love

மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் உள்ள கரஞ்சா நகரின் ‘டெல்லி வெஸ்’ பகுதியில், தெருநாய் ஒன்று பழ வியாபாரியை கொடூரமாகத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில், இச்சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

அப்பகுதியில் பழ வியாபாரி நின்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகப் பாய்ந்த அந்த வெறிநாய் அவரது உடலின் பல்வேறு இடங்களில் பலமுறை கடித்துக் குதறியது. வியாபாரி தன் கையிலிருந்த தடியால் நாயை அடித்து விரட்ட முயன்றபோதிலும், அது அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவரைத் தாக்கியபடி இருந்தது.

   

https://twitter.com/HateDetectors/status/2087880599704920105/video/1

   

நாயின் தாக்குதலில் தீவிர காயமடைந்த அந்த பழ வியாபாரி உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.