நேற்று ராணவ், இன்னைக்கு இவரா?.. இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா..?

By Nanthini on ஜனவரி 5, 2025

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதற்கு முந்தைய சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 10 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்ற நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் பவித்ரா, மஞ்சரி, தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரயான், சௌந்தர்யா மற்றும் ராணவ் ஆகிய 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

Bigg Boss Tamil Season 8: "பவித்ரா கடிக்கிறா" - கூப்பாடு போடும் மஞ்சரி.,  கலவரமாகும் பிக் பாஸ் தமிழ்.. ப்ரோமோ உள்ளே.! | 🎥 LatestLY தமிழ்

   

இவர்களில் ஒருவர் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்ற உள்ளனர். இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ பின்னாலே டாஸ்கில் ரயான் வெற்றி பெற்றதால் இந்த சீசனில் முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். ஆனால் தற்போது பிக் பாஸ் வீட்டில் கூட்டம் அதிகமாக உள்ளதால் கடந்த சில வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் தீபக், ஜாக்குலின், ரயான், ரானவ், பவித்ரா, மஞ்சரி, அருண் மற்றும் விஷால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

   

பிக்பாஸ் எலினிமேஷன் : ராணவ், மஞ்சரிக்கு குட்பை; டிக்கெட் டூ ஃபைனல் ட்விஸ்ட்  | biggboss 8 tamil raanav manjari evicted from the house | HerZindagi Tamil

 

நேற்று விஜய் சேதுபதி பேசுவதை பார்க்கவே ரசிகர்கள் கூட்டம் காத்திருந்த நிலையில் இந்த வாரமும் டபுள் எவிக்சன் நடைபெற்று உள்ளது. அதன்படி நேற்று போட்டியாளர் ராணவ் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட நிலையில் அவரைத் தொடர்ந்து இன்று போட்டியாளர் மஞ்சரி எலிமினேட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் பைனல் நடைபெற உள்ளதால் இனி வரும் டாஸ்க் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடுவார்கள் என தெரிகிறது.