TTF வாசன் பிரபலமான youtuber மற்றும் இன்ஸ்டா influencer ஆவார். Twin Throttalers என்ற பைக் ரைடிங் சம்பந்தமான youtube சேனலை நடத்தி வருகிறார். இவரது சேனலில் 3.37 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். கோயாம்புத்தூரில் மேட்டுப்பாளையத்தில் பிறந்து வளர்ந்தவர் TTF வாசன். பிஏ பட்டப்படிப்பை முடித்த இவர் இளம் வயதிலேயே பைக் ஓட்ட ஆரம்பித்தார்.
2017 ஆம் ஆண்டில் அவர் தனது பைக் பயணங்களின் காட்சிகளை யூடியூபில் பதிவேற்ற தொடங்கினார். அவரது சேனல் விரைவாக இன்றைய 2k கிட்ஸ் இடையே பிரபலமானது. ஒரு பைக் ரேஸர் அளவுக்கு வேகமாக பைக் ஓட்டுவதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார் TTF வாசன். இந்தியா முழுவதும் பைக்கிலேயே சுற்றி வந்ததை தனது youtube இல் பதிவேற்றினார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 1 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸும் ட்விட்டரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் இருக்கின்றார்கள்.
குறுகிய காலத்தில் பிரபலமான TTF வாசன் சினிமாவில் நடிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். “மஞ்சள் வீரன்” என்ற திரைப்படத்தில் நடிப்பதாக கூறி போஸ்டரும் வெளியானது. ஆனால் இயக்குனரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக அறிவித்தார். TTF வாசன் அடிக்கடி சர்ச்சையில் சிக்க கூடியவர். 2019-ல் தனது பைக்கை ஆபத்தான வேகத்தில் ஒட்டியதாக குற்றம் சாட்டப்பட்டார். மணிக்கு 247 கிலோமீட்டர் பைக் வேகத்தில் ஓட்டுவதை காட்டிய வீடியோவை பார்த்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
மறுபடியும் சில நாட்கள் கழித்து காரை போன் பேசிக்கொண்டே ஓட்டியதால் இவரது ஓட்டுநர் உரிமம் சிறிது காலத்திற்கு ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார் TTF வாசன். அதாவது இவர் தனது காரில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அப்போது கையில் மலைப்பாம்பு ஒன்றை சுற்றிக்கொண்டு பயணிப்பதை போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்த நிலையில் வனத்துறையினர் அவரின் மீதான விசாரணையை தொடங்கினர். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியது. இப்படியான நிலையில் டிடிஎஃப் வாசன் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. என்ன பண்ணாலும் தப்புன்னு சொல்றாங்க. ஆயிரம் பிரச்சனை பண்றாங்க. யூடியூபில் வீடியோ போடுவது தான் உங்களுக்கு பிரச்சனை என்றால் உரிமை பெற்று நான் செய்த விஷயத்தை வீடியோவாக பதிவிடுவேன். நான் பறக்கும் போது தடுக்க நினைத்தால் இறங்கி ஓடுவேன் தரையில், நான் நடக்கும்போது தடுக்க நினைத்தால் நடந்து கடப்பேன் மலையை. நான் நடக்கும் போதும் நீங்கள் பிரச்சனை செய்கிறீர்கள் என்றால் நகர்ந்து போவேன். என்னோட விடாமுயற்சியை நான் யாருக்காகவும் எதுக்காகவும் விடப்போவது கிடையாது எனக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க