தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் எம்ஜிஆர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலிலும் சினிமாவிலும் தனக்கென தனி பாதையை உருவாக்கி இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்தவர் எம்ஜிஆர்.
சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டது எம்ஜிஆரின் குடும்பம். அதற்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு எம்ஜிஆருக்கு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்தி அபாரமாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார் எம்ஜிஆர். இவரது படங்களில் சமூக நீதி கருத்துக்கள் ஆக்சன் காட்சிகள் திராவிட சிந்தனைகள் இருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.
தன்னை வெற்றி நாயகனாக ஆக்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார் எம்ஜிஆர். எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர். வாரி கொடுக்கும் வள்ளல். அதேபோல் ரசிகர்களை அளவுக்கு அதிகமாக உறவு போல் மதிப்பவர். எம்ஜிஆருக்கு இருந்தவர்கள் எல்லாம் ரசிகர்கள் அல்ல பக்தர்கள் என்று சொல்லலாம். அப்படி எம்.ஜி.ஆருக்கும் ரசிகருக்கும் இடையே நடந்த ஒரு சம்பவத்தை பற்றி இனி காண்போம்.
எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் தொழிலில் போட்டி இருந்தது. ஆனால் நிஜ வாழ்க்கையில் நண்பராக தான் இருந்தார்கள். ஆனால் அவரது ரசிகர்கள் இருவரின் படங்கள் ரிலீஸ் ஆனாலும் கொண்டாடி தீத்து விடுவார்கள். அப்படி முதல் நாள் சிவாஜி நடித்த விடிவெள்ளி திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. மறுநாள் எம்ஜிஆர் நடித்த அரசிளங்குமாரி திரைப்படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இரண்டு படங்களும் வெற்றி பெற்றுவிட்டது. அப்போது படம் பார்க்க சென்ற எம்ஜிஆர் இடம் ஒரு ரசிகர் குறும்பாக சிவாஜி படத்தை கையில் கொடுத்து ஆட்டோகிராப் போட சொல்லி கேட்டிருக்கிறார். அதை புரிந்து கொண்ட எம்ஜிஆர் வாழ்க திராவிடம் என்று எழுதி கையெழுத்து போட்டு அவருடைய குறும்பை காட்டியிருக்கிறார். அப்படி ரசிகருடன் ஒரு பரஸ்பர அன்பை பகிர்ந்து இருக்கிறார் எம்ஜிஆர்.