மலையாள சினிமாவின் கொடுமுடிகளாக கடந்த 40 ஆண்டுகளாக கோலோச்சி வருகின்றனர் மம்மூட்டியும் மோகன்லாலும். கடந்த சில ஆண்டுகளாக தோல்வி படங்களாகக் கொடுத்த மம்மூட்டி தற்போது அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து கம்பேக் கொடுத்துள்ளார். சமீபத்தில் ரிலீஸான அவரின் ப்ரமயுகம் படம் 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து கலக்கிவருகிறது.
தற்போது 73 வயதானாலும் கொஞ்சம் கூட அசராமல் படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பல படங்களை நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் தமிழிலும் பல திரைப்படங்கள் ஹிட் அடித்திருந்தது. இதுவரை 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், இப்போதும் வருடத்துக்கு 5 படங்கள் அளவுக்கு நடிக்கிறார்.
தமிழ் தாண்டி பிறமொழிகளில் மம்மூட்டி நடிக்கிறார். ஆனால் இயக்குனர்கள் சொல்லும் கதையும் கதாபாத்திரமும் பிடித்திருந்தால் மட்டுமே அதில் நடிக்க ஒப்புக்கொள்வார். அப்படி அவர் மம்மூட்டி இயக்கத்தில் அரசியல் மற்றும் மக்கள் ஆட்சி ஆகிய படங்களில் நடித்தார். அந்த படங்களில் நடித்த போது அவரோடு நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் “என் படத்தில் நடிக்க மம்மூட்டிக்கு நான் 25 லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்தேன். அப்போது அவர் வேறொரு மலையாள படத்தில் நடிக்க 2 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார். நான் அவரிடம் என்ன சார் என் படத்துக்கு இவ்ளோ சம்பளம் வாங்கிட்டு அந்த படத்துக்கு மட்டும் 2 லட்ச ரூபாய் சம்பளம் வாங்குறீங்க எனக் கேட்டேன்.
அதற்கு அவர் ”செல்வமணி அந்த படம் அவ்வளவுதான் தாங்கும். அது கமர்ஷியல் படம் இல்லை. ஆர்ட் பிலிம். அதனாலதான் அந்த படத்துக்கு கம்மியா சம்பளம் வாங்கிட்டு நடிக்கிறேன்.” என சொன்னார்.” என ஆச்சர்யத்துடன் தெரிவித்துள்ளார்.