2015 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தையும் தெளிய வைத்து தெளிய வைத்து அடித்தனர் சோஷியல் மீடியாவினர். பாட்ஷா கதையை உல்டா பண்ணி எடுத்துவிட்டு இயக்குனர் லிங்குசாமி ப்ரமோஷன்களில் கொடுத்த பில்டப்புகளை நம்பி வந்த ரசிகர்களுக்கு அஞ்சான் படம் வதைமுகாமாக அமைந்தது.
அந்த கடுப்பில் படத்தை கேலி செய்து மீம்களாக பறக்கவிட்டன. பட ப்ரமோஷனில் லிங்குசாமி பேசிய ‘கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கிருக்கேன்’ என்ற வார்த்தைகளை வைத்துக் கொண்டே லிங்குசாமியின் சினிமா கேரியரையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அதே போலதான் சூர்யாவுக்கும் நடந்தது. சூர்யா, அப்போது தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருந்தார். அவர் படங்கள் விஜய், அஜித் படங்களுக்கு இனையாக பிஸ்னஸ் செய்யப்பட்டன. ஆனால் இந்த படம் அவரை பல அடி சறுக்கி விழவைத்தது. இந்த படத்தைக் கழுவி கழுவி ஊற்றிய விமர்சனங்களில் ஒன்று ஆர் ஜே பாலாஜியின் ரேடியோ நிகழ்ச்சி.
அப்போது ஆர் ஜே வாக இருந்த பாலாஜி, சினிமா விமர்சனம் செய்துவந்தார். அவரது விமர்சனங்கள் பெரும்பாலும் கேலித்தன்மை மிகுந்து இருக்கும். அதேபோலதான் அஞ்சான் படத்தையும் அவர் கழுவி ஊற்றினார். இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன், பாலாஜியின் நிகழ்ச்சியை முடக்கும் அளவுக்கு சென்றார். அதில் கடுப்பான பாலாஜி “என் வாய மூடிட்டேல்… ஊர் வாய எப்படி மூடப் போறேல்” என ட்விட் செய்து கலாய்த்தார்.
அப்படி சூர்யாவின் படத்தைக் கழுவி ஊற்றிய பாலாஜி, அதன் பின்னர் நடிகராகி, ஹீரோவாகி பின்னர் இயக்குனர் ஆகி இப்போது சூர்யா நடிக்கும் படத்தை இயக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார். நேற்று அவர் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 45’ படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸாகியது.