தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ரப்பர் பந்து படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர் ஒருவர் அதற்கு நல்ல ரிவ்யூ போட்டு இருந்தார். அந்த பதிவில் கீழே தமிழரசன் பச்சமுத்து கமெண்டில் நன்றி தெரிவித்தார்.
இதற்கிடையே பெண் ஒருவர் லப்பர் பந்து திரைப்படத்தை விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்துடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். அந்த பெண் லப்பர் பந்து படம் தான் கேப்டனுக்கான உண்மையான ட்ரிபியூட். கோட் திரைப்படம் இல்லை என பதிவிட்டு இருந்தார்.
அந்த பதிவை தமிழர்கள் பச்சமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதனை தவறாக சிலர் புரிந்து கொள்வார்களே என நினைத்து ரசிகர் ஒருவர் தமிழரசன் பச்சமுத்துவை முகநூல் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். உடனே தமிழரசன் பச்சமுத்து அது தவறுதான். இனி ஏற்படாது. மன்னியுங்கள் என கூறியுள்ளார்.
லப்பர் பந்து திரைப்படம் தமிழ் சினிமாவில் புதிய ட்ரெண்டை உருவாக்கி சூப்பர் ஹிட் ஆனது. தான் செய்த தவறுக்கு அவர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்டது மிகப்பெரிய விஷயம். தமிழரசன் பச்சமுத்து கொண்டாடப்படக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் என ரசிகர் ஒருவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.