44 அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு… உலக சினிமாவிலேயே ஒரே தயாரிப்பாளர்… அது யார் தெரியுமா?

By vinoth on ஆடி 1, 2024

Spread the love

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 90 களில் கோலோச்சிய தயாரிப்பாளர்களில் ஒருவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனர் ஆர் பி சௌத்ரி. அவர் படங்களின் தனிச்சிறப்பே புதுமுக இயக்குனர்களைக் கொண்டு நல்ல கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து சூப்பர் ஹிட் கொடுத்ததுதான். இதுவரை அவர் 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அதுபோல 95 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

ஆனால் இப்போது பிற மொழிகளில் படங்களைத் தயாரித்தாலும் தமிழில் படங்கள் தயாரிப்பதில்லை. தன்னுடைய நிறுவனத்தின் 100 ஆவது படத்தை விஜய்யை வைத்து தயாரிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். ஆனால் அது நடப்பதற்கான சூழல் இப்போது இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் விஜய் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்து விட்டதால் இன்னும் ஒரே ஒரு படம்தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

ஆர் பி சௌத்ரி தன்னுடைய உச்சத்தில் இருந்த போது அவர் தயாரித்த பெரும்பாலான படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன. அவர் இத்த்னைக்கும் ரஜினி, கமல் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்களைத் தேடிச் செல்லவே இல்லை. இரண்டாம் நிலை மூன்றாம் நிலை நடிகர்களை வைத்து அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து படங்களைத் தயாரித்தார்.

   

இதுவரை 90 க்கும் மேற்பட்ட படங்களை அவர் தயாரித்துள்ள நிலையில் 44 புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்துள்ளாராம். இதில் விக்ரமன், கே எஸ் ரவிக்குமார், எழில், லிங்குசாமி என இன்று முன்னணி இயக்குனர்களாக விளங்கும் பலரும் அடக்கம். இப்படி உலக சினிமாவிலேயே ஒரு தயாரிப்பு நிறுவனம் 44 பேரை இயக்குனராக அறிமுகம் செய்திருக்குமா என்பது சந்தேகமே.

 

அதே போல ஒரு படத்தைத் தயாரிப்பதற்கு முன்னர் அந்த கதையைக் கேட்டு அவருக்கு பிடித்திருந்தால் மட்டுமே அடுத்து எந்த ஹீரோ என்று முடிவு செய்வாராம். ஹீரோவை முடிவு செய்துவிட்டு அதற்கேற்ப கதை செய்யும் வேலையெல்லாம் அவரிடம் நடக்காதாம்.