Connect with us

தமிழ், மலையாளம் எல்லாம் இல்லையாம்.. ஸ்ட்ரெயிட்டா பாலிவுட் நடிகையை தட்டி தூக்கிய கவின்.. வெளியான மாஸ் அப்டேட்..!

CINEMA

தமிழ், மலையாளம் எல்லாம் இல்லையாம்.. ஸ்ட்ரெயிட்டா பாலிவுட் நடிகையை தட்டி தூக்கிய கவின்.. வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் கவினின் அடுத்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கவின். சினிமாவில் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலமாக மிகப் பிரபலமானார். அதை தொடர்ந்து சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்து கொண்டிருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

   

இந்த நிகழ்ச்சி மூலமாக மிகவும் பிரபலமான கவின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து டாடா என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த  திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதனால் வளர்ந்து வரும் நடிகராக மாறினார் கவின். அதைத்தொடர்ந்து ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

 

இந்த திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி கலவை என விமர்சனங்களை கொடுத்திருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்பொழுது நடிகை ஆண்ட்ரியா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார்.

இந்நிலையில் இப்படம் குறித்த ஒரு அப்டேட் வெளியாகியிருக்கின்றது. அதாவது இந்த திரைப்படத்தில் நடிகை ருஹானி சர்மா கவினுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு கடைசி பெஞ்ச் கார்த்திக் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து ஹிந்தி மற்றும் பாலிவுட் திரைப்படங்களின் நடித்து வருகின்றார். மேலும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் நெருங்கிய உறவினர்தான் நடிகை ருஹானி சர்மா. இவர் கவினுக்கு ஜோடியாக தற்போது நடிக்க இருப்பது கவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top