தவெக-வுக்கு ஆதரவா..? திமுக-வுக்கு விசுவாசமா..? – விசிக முன்வைக்கும் கேள்விகள்..! பின்னணி என்ன..?

By Swetha on வைகாசி 8, 2026

Spread the love

தவெகவுக்கு மேலும் 5 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் தமிழக கட்சியின் தலைவர் விஜய் விசிக, விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறார். தற்போது அவர்கள் இது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள விசிக பொதுச் செயலாள சிந்தனை செல்வன் ‘ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மை தனக்கு கிடைக்காத சூழ்நிலையில் தவெக மிகவும் கவனமாக செயல்பட்டிருக்க வேண்டும்.. உடனே தான் ஆதரவு பெற விரும்பும் அரசியல் கட்சித் தலைவர்களை விஜய் நேரில் சந்தித்திருக்க வேண்டாமா?

   

கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது ஆலோசனை கூட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று மாலை 5 மணிக்கு விடுதலைச் சிறுத்தை கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறவிருக்கிறது. அநேகமாக இன்று இரவுக்குள் அவர்கள் தங்கள் முடிவை சொல்வார்கள் என தெரிகிறது..இரண்டாம் கட்ட தலைவர்களின் பிடியில் தான் இல்லை என்பதையும், ஆளுநர் வழியாக பாஜக தமிழகத்திற்குள் நுழைய முயற்சிப்பதை தடுக்க வேண்டியது அவசியம் குறித்தும் மனம் விட்டு கலந்துரையாடி இருக்க வேண்டாமா?.. வாட்ஸ் அப்பில் கடிதத்தை அனுப்பிவிட்டு பதில் சொல்லுங்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்..