மழைநீரில் தத்தளிக்கும் தெலுங்கானா… கேள்விக்குறியாகும் டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on ஆவணி 11, 2025

Spread the love

ஹைதராபாத் கடந்த சில வாரங்களாகவே மழையில் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில் சொமேட்டோ டெலிவரி ஊழியர் ஒருவர் திறந்திருந்த வடிகாலில் விழுந்து உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தில் மாலை நேரம் வரும்போது பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பெய்து வரும் கனமழையால் அனைத்து சாலைகளும் குளங்களாக மாறிவிட்டது. இதனால் வெளியே சென்றவர்கள் தங்களுடைய வீடுகளை அடைய சிரமப்படுகிறார்கள். இருப்பினும்  சொமேட்டோ டெலிவரி ஊழியர் ஒருவர் மழையில் கட்டுப்பாட்டை இழந்து திறந்த வடிகாலில் விழுந்துள்ளார். இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி உள்ளார்கள் .

மேலும் அவருடைய செல்போன் மழை நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அவருடைய இருசக்கர வாகனம் சேதம் அடைந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதனையடுத்து இது விபத்து அல்ல.   இந்த தளங்கள் லாபத்திற்காக மட்டுமே முன்னுரிமை அளிக்கின்றன. தொழிலாளர்களுடைய பாதுகாப்பில் அவர்கள் எந்த கவனமும் செலுத்தவில்லை என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.  மேலும் இந்த விபத்துகளுக்கு சொமேட்டோ நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெலுங்கானா கிக் தொழிலாளர் சங்கம் கோருகிறது.