மனித முக தோற்றத்துடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி… வியந்து பார்த்த ஊர் மக்கள்…!

By Srimathi on ஆவணி 11, 2025

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம், சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஆனந்த்(38), தனது வீட்டில் 20 ஆடுகளுக்கு மேல் வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வளர்த்த ஆடுகளில் ஒன்று, நேற்று 2 குட்டிகளை ஈன்றது. அதில் ஒன்று இயல்பான ஆட்டுக்குட்டி போல் இருந்தது, மற்றொன்று மனித முகத் தோற்றத்தில் வித்தியாசமாக இறந்து பிறந்தது.

இந்த அதிசய சம்பவத்தை, அந்த ஊர் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, இறந்த ஆட்டுக்குட்டியை பார்த்துச் சென்றனர். வினோத உருவத்துடன் குட்டி பிறந்திருப்பதால், ஏதேனும் அசம்பாவிதம் நடக்குமோ என்ற பீதியை சிலர் கிளப்பி வருகின்றனர்.