செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மதுராந்தகம் என்ற ஊரில் வசிக்கும் 13 வயது மாணவி. இவர் விடுதியில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறை நாட்களில் வீட்டுக்குச் சென்றால் தன் தாயும் அவரது 3-வது கணவரும் என்னை பாலியல் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக தன் ஆசிரியரிடம் கூறி மாணவி அழுதுள்ளார். இதை கேட்ட அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் குழந்தை உதவி மையத்திற்கு புகார் அளித்துள்ளார். மேலும் மகளிர் போலீஸ் ஆணையத்திலும் தகவல் தெரிவித்துள்ளார். இதன் பெயரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் மாணவிக்கு தன் தாயாரே செய்த இச்சம்பவம் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. தாயாருக்கு பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவர் தற்போது அவரது 3-வது கணவருடன் வாழ்ந்துவருகிறாரர். அந்த 3-வது கணவனும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து தாயாரே மகளை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளிவுள்ளார். இந்த கொடுமை தாங்காமல் மாணவி வீட்டுக்கு செல்வதையே தவிர்த்துள்ளார். இருந்தும் அம்மா மகளை பாசமாக அழைத்துச் சென்று மீண்டும் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் மாணவி ஆசிரியரிடம் சொல்லி அழுதுள்ளார்.
மதுரங்கத்தில் உள்ள ஒரு விடுதியில் அரை எடுத்து அங்கு மகளை அழைத்துக் கொண்டு சென்று பல ஆண்களுடன் விபச்சாரத்தில் தள்ளி பணம் சம்பாதித்து உல்லாசமாக இருந்துள்ளார். இது மட்டுமில்லாமல் மாணவி விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தால் வீட்டிலும் பல ஆண்களுக்கு மகளை விருந்தாக்கி உள்ளார். பெற்ற மகளையே விபச்சாரத்தில் தள்ளிய தாயாரை கைது செய்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் 3-வது கணவரையும் இதற்கு உடந்தையாக இருந்த 3 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் தள்ளிவுள்ளனர். மாணவியை பத்திரமாக அரசு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் செங்கல்பட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
