அவசரமா பாத்ரூம் வந்தா என்னடா பண்ணுறது..? சீன கழிப்பறையில் இதை செய்வது கட்டாயம்… என்னனு நீங்களே பாருங்க…!!

By Soundarya on புரட்டாதி 25, 2025

Spread the love

சமூக ஊடகத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று மக்களை சிந்திக்க வைத்துள்ளது. அதாவது சீனாவில் உள்ள ஒரு பொதுக் கழிப்பறையிலிருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு பெண் தன்னுடைய தொலைபேசி பயன்படுத்தி கழிப்பறையின் சுவரில் பொருத்தப்பட்ட காகிதத்தில் க்யூ ஆர் கோட்டை ஸ்கேன் செய்கிறார். பிறகு செல்போனில் சில வினாடிகள் விளம்பரம் வந்த பிறகு தான் அதிலிருந்து காகிதம் வெளியே வருகிறது. அதிகப்படியான பயன்பாடு மற்றும் வீணாக்கத்தை தடுப்பதற்கு இந்த முறையை பின்பற்றுவதாக கூறப்படுகிறது.

 

   
View this post on Instagram

 

A post shared by Inside History (@insidehistory)

அதாவது ஒரு சிறிய அளவு கழிப்பறை காகிதம் தேவைப்பட்டால் கூட முதலில் தொலைபேசியில் உள்ள ஒரு சிறிய விளம்பரத்தை பார்க்க வேண்டும். அதிக காகிதம் தேவைப்பட்டால் ஆறு ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டும். இந்த வீடியோ வைரலானவுடன் இது புதியது ஒரு சிலர் இதை வீணாவதை தடுக்க நல்ல வழி என்று கூறுகிறார்கள். மற்றவர்கள் இது தனி உரிமை மீதான படைகளுக்கு என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஒரு பயனர் என்னுடைய இணையம் செயலிழந்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்கிறார். மேலும் விளம்பரம் முடிவதற்குள் என்னுடைய பேண்டில் மலம் கழித்திருப்பேன் என்றும் கூறுகிறார். மற்றொரு பயனரோ எனக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு தொலைபேசியின் பேட்டரி தீர்ந்து விட்டால் என்ன நடக்கும் கற்பனை செய்து பாருங்கள் என்று கூறுகிறார்கள்.