டெல்லியில் உள்ள விக்ஞான் பவனில் நேற்று முன்தினம் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரையுலகை சேர்ந்த ராம்குமார் பாலகிருஷ்ணன், எம்.எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. ஹிந்தியில் ஷாருக்கான், மலையாள திரை உலகில் நடிகை ஊர்வசி ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது த்ரிஷா தோசர் என்ற சிறுமிக்கு வழங்கப்பட்டது. அவருக்கு 4 வயது தான் ஆகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு சுதாகர் ரெட்டி இயக்கத்தில் “நால்” என்ற மராத்திய படம் வெளியானது. இந்த படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது. ஆனால் சிமி என்ற கதாபாத்திரத்தில் அப்போது 2 வயதான திரிஷா தோசர் நடித்திருந்தார். அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மொத்தமாக போட்டியிட்ட 332 படங்களில் திரிஷா தோசரின் நடிப்பு அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. இவர் அழகாக சேலை அணிந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் விருதினை பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது,
நான் எனது ஆறு வயதில் தேசிய விருது வென்றேன். அந்த சாதனையை முறியடித்த த்ரிஷா தோசருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். நீங்கள் இன்னும் நிறைய தூரம் போக வேண்டும். உங்கள் அபார திறமையை வளர்த்துக் கொள்ள பாடுபடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.
Dear Ms. Treesha Thoshar, my loudest applause goes to you. You’ve beaten my record, as I was already six when I got my first award! Way to go madam. Keep working on your incredible talent. My appreciation to your elders in the house.
— Kamal Haasan (@ikamalhaasan) September 25, 2025
