pushpa 2

பாகுபலி RRR படங்களை ஓவர்டேக் செய்தது… 6 நாட்களில் இமாலய சாதனை படைத்த புஷ்பா 2…

By admin on மார்கழி 11, 2024

Spread the love

சுகுமார் எழுதி இயக்கி அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நான் புஷ்பா தி ரைஸ். இது தெலுங்கு மொழி திரைப்படம் ஆகும். தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் மலையாளம் கன்னடா இந்தி ஆகிய மொழிகளிலும் இத்திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது.

   

புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் வெளியான உடனேயே இரண்டாவது பாகம் தயாராகிக் கொண்டிருக்கிறது விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த டிசம்பர் ஐந்தாம் தேதி புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் உலகெங்கிலும் வெளியானது. புஷ்பா 2 படம் வெளியாகும் முன்னரே டிக்கெட் அட்வான்ஸ் புக்கிங்கில் 100 கோடி வசூலித்து சாதனை படைத்திருந்தது.

   

படம் வெளியான முதல் நாளில் 294 கோடி வசூலித்து இருந்தது புஷ்பா 2. இரண்டாவது நாளில் 449 கோடிகளும் மூன்றாவது நாளில் 621 கோடியும் நான்காவது நாளில் 829 கோடியும் தற்போது ஐந்தாவது நாளில் 922 கோடிகளையும் குவித்து இமாலய சாதனை படைத்து வருகிறது புஷ்பா 2. இனி விரைவில் ஆயிரம் கோடியை தொட்டுவிடும் என்பதில் சந்தேகம் இல்லாத அளவுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஹவுஸ்புல் ஆக ஓடி கொண்டிருக்கிறது.

 

தற்போது இந்திய சினிமாவின் பார்வை முழுவதும் தெலுங்கு சினிமாவில் உருவான இந்த புஷ்பா 2 பக்கம் தான் திரும்பி இருக்கிறது. ஏனென்றால் பாகுபலி கல்கி ஆர் ஆர் ஆர் போன்ற திரைப்படங்களின் மொத்த வசூலை படம் வெளியான 5 நாட்களில் முறியடித்து இருக்கிறது புஷ்பா 2. இன்னும் இது ஆயிரம் கோடியை தாண்டி கூட போகும் என்று பேசப்பட்டு வருகிறது. படத்தின் திரைகதையும் விறுவிறுப்பும் மக்களை தியேட்டரில் சீட்டின் நுனியில் இருந்து பார்க்க வைக்கிறது என்று சினிமா விமர்சகர்கள் கூறியிருக்கிறார்கள்.