ஆந்திராவைச் சேர்ந்த மூத்த நடிகர் மோகன் பாபு. இவருக்கு தற்போது வயது 72 ஆகும். இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமானவர். தமிழில் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று என்ற திரைப்படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருப்பார்.

மோகன் பாபுவுக்கு இரண்டு மகன் ஒரு மகள் இருக்கின்றனர். தற்போது அவரது மகன் மனோஜ் மஞ்சுவுடன் சொத்து பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. அதில் ஹைதராபாத்தில் வசித்து வரும் நடிகர் மோகன் பாபு ஹைதராபாத் போலீசில் தனது மகன் மனோஜ் மஞ்சுவிடம் இருந்தும் தனது சொத்துக்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.
எனது மகன் மனோஜ் மஞ்சுவும் மருமகள் மோனிகாவும் நிறைய ஆட்களை கூட்டி வந்து தனது வீட்டை அபகரிக்க முயல்வதாக அந்த புகாரில் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு இவரது மகன் மனோஜ் மஞ்சு ஒரு சில நபர்களுடன் வந்து அவரது வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினையை பற்றிய செய்திகளை சேகரிக்க செய்தியாளர்கள் அங்கு சென்றிருந்தனர்.
அப்போது வீட்டிலிருந்து வெளிவந்த நடிகர் மோகன் பாபு செய்தியாளர்களின் மைக்கை பிடுங்கி எறிந்து அவர்களை ஆக்ரோஷமாக தாக்க ஆரம்பித்திருக்கிறார். செய்தியாளர்கள் பயந்து ஓடி இருக்கின்றார்கள். ஆனாலும் விடாமல் அவர்களை துரத்தி துரத்தி அவர்களை அடிக்க முயற்சி செய்திருக்கிறார் மோகன் பாபு.

மோகன் பாபு பத்திரிக்கையாளர்களை அடிக்கப் பாய்ந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பத்திரிக்கையை சேர்ந்தவர்கள் மோகன் பாபு பத்திரிகையாளர்களிடம் பொதுவாக மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறி இருக்கின்றனர். இதனால் பல சிக்கல்களில் மாட்டியிருக்கிறார் நடிகர் மோகன் பாபு.
