தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் நிற்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் புஷ்பா 2. இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தத் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா தி ரூல் படத்தின் முதல் பார்வை இந்த ஆண்டு வெளியானதில் இருந்தே படம் குறித்து பார்வையாளர்கள் மனதில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

சமீபத்தில் படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் அல்லு அர்ஜுன் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டிக்கெட் விண்டோவில் படம் பெரும் வசூலை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ரிலீசுக்கு முன்பே பல கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதாவது புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் க்கு முந்தைய வியாபாரத்தில் 1085 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது புஷ்பா 2 படத்திற்கு குபா ப்ராஜெக் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்துள்ளார். தற்போது படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரமோஷன் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் கூட சென்னையில் புஷ்பா 2 பிரமோஷன் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு மூலம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது இந்த திரைப்படம்.
