300 கோடி சம்பளம், தனி விமானம், மல்டிபிளக்ஸ் ஸ்டூடியோ… அசர வைக்கும் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு..!

By Soundarya on மார்கழி 4, 2024

Spread the love

தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் நிற்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் புஷ்பா 2. இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தத் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா தி ரூல் படத்தின் முதல் பார்வை இந்த ஆண்டு வெளியானதில் இருந்தே படம் குறித்து பார்வையாளர்கள் மனதில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில்  அல்லு அர்ஜுன் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார்.

Allu Arjun: `அவர் அப்படிப் பயன்படுத்தக் கூடாது" - அல்லு அர்ஜுனுக்கு எதிராக  காவல் நிலையத்தில் புகார்! | Police complaint filed against Allu Arjun -  Vikatan

   

இந்த படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது .  அல்லு அர்ஜுன் தன்னுடைய சம்பளத்தை முப்பது சதவீதம் உயர்த்தியுள்ளார். புஷ்பத்து படத்திற்கு பிறகு 300 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் ஒரு பான் இந்தியா பிரபலம். இவர் சுமார் 460 கோடி சொத்துக்கு அதிபதி என்று கூறப்படுகிறது.

   

Allu Arjun With Family Latest Video ,Allu Arjun Wife Sneha Reddy ,Daughter  ARHA ,Son Ayaan - YouTube

 

இவருக்கு ஹைதராபாத் ஜூபிளில் ஒரு ஆடம்பரம் பங்களா உள்ளது. 8000 சதுர அடியில் பரந்து விரிந்துள்ள இந்த பங்களாவின் மதிப்பானது சுமார் 100 கோடி ஆகும். மேலும் இவரிடம் 80 கோடி மதிப்புள்ள ஆடம்பரமான தனி விமானம் ஒன்று உள்ளது. ஜாகுவார் XJL, ரேஞ்ச் ரேவர் வோக் மற்றும் பிஎம்டபிள்யூ ஸ்போர்ட்ஸ் , உள்ளிட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள அதிசய சொகுசு கார் உள்ளதாம்.

மேலும் இவர் ஹைதராபாத்தில் AAA என்ற மல்டிபிளக்ஸ் காட்டியுள்ளார். அவருக்கு 10 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஸ்டூடியோவும் உள்ளது.  மேலும் அவர் பல பிராண்டுகளையும் விளம்பரப்படுத்துகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.