மிகவும் அன்பான மனிதர்… உங்களுக்கு எனது காதல் மட்டும்தான்… நாக சைதன்யா-சோபிதா திருமணத்தை முன்னிட்டு சமந்தா போட்ட பதிவு…!

By Soundarya on மார்கழி 4, 2024

Spread the love

நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அதன் பிறகு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கேரக்டரில் நடித்து புகழ்பெற்ற சோபிதா உடன் டேட்டிங் செய்து வந்தார். அப்போது வெளிநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பேசுபொருளானது. ஆனால் தங்களுக்குள் இருக்கும் காதலை இருவரும் மறைத்தே வைத்திருந்தனர்.

   

இப்படியான நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இரண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்து முடிந்தது.நிச்சயதார்த்தம் முடிந்ததை தொடர்ந்து இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டனர். கடந்த தீபாவளியை கூட இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடினர். இந்த நிலையில் இருவருக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக  இன்று திருமணம் நடைபெறுகிறது.

   

 

இந்த திருமணத்தை படு பிரமாண்டமாக நடத்துவதற்கு நாகார்ஜுனா திட்டமிட்டு இருக்கிறார். அதாவது 200 கோடி ரூபாய் வரை செலவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திருமணம் ஏகப்பட்ட சடங்குகளோடு எட்டு மணி நேரம் வரை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பல பெரிய பெரிய சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சோபிதாவின் தங்கை சமந்தா திருமணத்தை முன்னிட்டு இன்ஸ்டா பக்கத்தில் எமோஷலான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது மிகவும் அன்பான மனிதர். உங்களுக்கு எனது காதல் மட்டும்தான் அக்கா என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் அதனை ஷேர் செய்து டிரெண்டாக்கி நாகசைதன்யாவுக்கு சோபிதாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.