தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் நிற்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் புஷ்பா 2. இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தத் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா தி ரூல் படத்தின் முதல் பார்வை இந்த ஆண்டு வெளியானதில் இருந்தே படம் குறித்து பார்வையாளர்கள் மனதில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் அல்லு அர்ஜுன் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டிக்கெட் விண்டோவில் படம் பெரும் வசூலை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் ரிலீசுக்கு முன்பே பல கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் க்கு முந்தைய வியாபாரத்தில் 1085 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. புஷ்பா 2 அதிக வசூலை அதன் திரையரங்கு உரிமைகள் மூலம் ஈட்டி உள்ளது. அதன் திரையரங்கு உரிமை 600 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தெலுங்கு மாநிலத்தில் மட்டும் புஷ்பாட்டு திரையரங்கு உரிமை 400 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் 100 கோடியும் வெளிநாடுகளில் 125 கோடியும் வசூலித்துள்ளது.

அதேசமயம் திரையரங்கு அல்லாத உரிமை 425 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. Netflix 275 கோடிக்கும், தொலைக்காட்சி உரிமை 85 கோடி, இசை 65 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புஷ்பா 2 திரைப்படம் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. ரிலீசுக்கு முன்பே தற்போது படம் 117 சதவீதம் லாபத்தை ஈட்டி உள்ளது. சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் ஆறாம் தேதி வெளியாக உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இப்படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
