சீக்கிரம் இந்த படத்த ஷூட்டிங்க முடிங்க.. இல்லன்னா நான் அந்த பொண்ண லவ் பண்ணிடுவேன் போல – இயக்குனரை எச்சரித்த அஜித்!

By vinoth on ஐப்பசி 23, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்‌ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.

   

90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் பல காதல் படங்களில் நடித்து பெண்களின் ஆசைநாயகனாக இருந்தார். இடையில் அவர் சில் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார். தன்னோடு இணைந்து நடித்த நடிகை ஹீராவை அவர் காதலித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின. இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சேர்ந்து சுத்துவதாகவும் கிசுகிசுக்கள் அப்போது பரவின. இதை இருவருமே மறுக்கவில்லை.

   

#image_title

 

ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களின் காதல் பிரிந்தது. இதனால் சில ஆண்டுகள் அஜித் சினிமாவில் சரிவர கவனம் செலுத்தாமல் இருந்தார். அப்போது அமர்க்களம் நடித்த போது ஷாலினி மீது அஜித் காதல் வசப்பட்டு அவரிடம் ப்ரபோஸ் செய்தார். ஷாலினியும் அவர் குடும்பமும் சம்மதித்த பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்.

இந்நிலையில் அஜித், ஷாலினி காதல் உருவாகக் காரணமாக இருந்த அமர்க்களம் படத்தின் இயக்குனர் சரண் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் அமர்க்களம் படம் ஷூட் பண்ணிட்டு இருக்கும்போது ஒரு நாள் அஜித் என்னை அழைத்து சீக்கிரம் இந்த படத்தின் ஷூட்டிங்கை முடியுங்கள். இல்லை என்றால் இந்த பொண்ண நான் லவ பண்ணிடுவேன் போலருக்கு என எச்சரித்தார். ஆனால் அவர் சொன்னதுபோலவே இருவரும் படம் முடிவதற்குள் காதலர்கள் ஆனார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.