walking

தினமும் 10000 Steps நடப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா…? இந்த பிரச்சனைகள் எல்லாம் வராதாம்…

By admin on ஐப்பசி 23, 2024

Spread the love

உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். நாம் எதற்கெல்லாம் முக்கியத்துவம் தருகிறோமோ இல்லையோ நம் உடல் நலனில் கட்டாயம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நோயின்றி நீண்ட ஆயுளோடு வாழ முடியும். அப்படி ஆரோக்கியமாக நாம் வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்துதான் ஆக வேண்டும். ஏனென்றால் இன்று இளம் தலைமுறையிர் வெகுவாக பாஸ்ட்புட் மோகத்தால் கெட்டுப் போய் இருக்கிறார்கள். அதனால் பலவித நோய்கள் வருகிறது. இந்த நேரத்தில் எச்சரிப்பாக நாம் பல வாழ்க்கை முறை மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

   

முதலில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடுத்ததாக உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் பலரால் உடற்பயிற்சி செய்வதற்கு நேரமே இருப்பதில்லை. ஆனாலும் குறைந்தபட்சமாக தினமும் அரை மணி நேரம் நடைபயிற்சியாவது மேற்கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த பத்தாயிரம் ஸ்டெப்ஸ் தினமும் நீங்கள் நடந்தால் அதனால் பல நன்மைகள் ஏற்படும் என்று கூறுகிறார்கள். அப்படி 10 ஆயிரம் அடிகள் நாம் நடக்கும்போது என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இனி காண்போம்.

   

நடைப்பயிற்சி நம் உடலை பிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இதயத்திற்கு பலம் சேர்ப்பதாகவும் கொழுப்புகளை கரைப்பதாகவும் இருக்கிறது. வேகமாக நடந்தாலும் சரி ஓடினாலும் சரி அது ஒருருடைய விருப்பம். ஆனால் ஒரு நாளைக்கு பத்தாயிரம் ஸ்டெப்ஸ் தூரம் நடை பயிற்சி செய்வது நிறையா ஆரோக்கிய நன்மைகளை தருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக உடல் பருமனை குறைக்க விரும்புவர்கள் உடல் எடையை குறைக்கும் டயட்டில் இருப்பவர்கள் கட்டாயம் இந்த பத்தாயிரம் ஸ்டெப்ஸ் நடப்பது மிகவும் நல்லது. அதனால் உடலில் பல்வேறு ஆரோக்கியமான மாற்றங்கள் உண்டாகும்.

 

முதலில் பத்தாயிரம் அடிகள் நடப்பது என்பது சற்று சிரமமாகத்தான் இருக்கும். சிறிது சிறிதாக 3000 6000 8000 அப்புறம் 10,000 என்று கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே செல்லுங்கள். இந்த பத்தாயிரம் ஸ்டெப்ஸ் தினமும் நீங்கள் நடக்கும்போது உங்கள் ரத்தத்தில் ஆக்சிஜன் அதிகரித்து ரத்த ஓட்டம் சீராகும். அதனால் இதயத்திற்கு ஆக்ஸிஜன் கிடைப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும். நடை பயிற்சியை மேற்கொள்வதால் நம் நுரையீரல் மற்றும் அதை சுற்றி உள்ள தசைகள் வலுப்பெறும் நீங்கள் சுவாசிப்பது எளிதாகும்.

இந்த பத்தாயிரம் அடிகள் நடக்கும் போது பெண்களுக்கு மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் குறைய வாய்ப்பிருக்கிறது. அது மட்டுமல்லாமல் நம் மூளை ஆக்டிவாக செயல்பட்டு சுறுசுறுப்பாக நம்மளை இருக்க உதவும். எலும்புகளை உறுதியாக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு நீரழிவு அளவை இது கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. இதுபோல பல நன்மைகள் இந்த பத்தாயிரம் அடிகள் நடப்பதினால் கிடைப்பதால் உங்களால் மற்ற உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும் தினமும் இந்த பத்தாயிரம் அடிகளை நடப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இது பலவித அற்புத மாற்றங்களை உங்கள் உடலுக்கு தந்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல வழியை ஏற்படுத்தும்.