எனக்கு இந்த சினிமாவே வேண்டாம்.. புஷ்பா பட இயக்குனரின் திடீர் முடிவால் ஷாக்கான ரசிகர்கள்..!

By Nanthini on மார்கழி 25, 2024

Spread the love

புஷ்பா திரைப்படம் மூலமாக பான் இந்திய நடிகராக உருவெடுத்துள்ளவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. சுகுமார் இயக்கிய இந்த திரைப்படத்தில் செம்மர கடத்தல் காரராக அல்லு அர்ஜுன் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாகவும் வில்லனாக பகத் பாசிலும் நடித்து அசத்தியுள்ளனர். இந்தத் திரைப்படம் தற்போது வரை 1500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதில் புஷ்பா 2 திரைப்படத்தில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் தான். இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அனலாய் வந்த அவசர அப்டேட்..! வட இந்தியாவில் புஷ்பா 2 ட்ரெய்லர் ரிலீஸ்... ! |  Tamil Cinema News

   

அதே சமயம் இப்படத்தில் ஸ்ரீ லீலாவும் ஒரு பாடலுக்கு நடனமாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கொள்ளை கொண்டார். புஷ்பா படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட புஷ்பா 2 படமும் தற்போது பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து வருகின்றது. 1500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புஷ்பா 2 சாதனை படைத்துள்ளது. விரைவில் 2000 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க அல்லு அர்ஜுன் தியேட்டர் சென்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சர்ச்சை தான் பெரிய அளவில் பரபரப்பை தெலுங்கு சினிமா துறையில் ஏற்படுத்தி வருகின்றது.

   

சினிமாவை விட்டே போகிறேன்.. புஷ்பா பட இயக்குனர் கொடுத்த அதிர்ச்சி | Pushpa 2 Director Sukumar Wants To Quit Cinema

 

இந்த நிலையில் புஷ்பா 2 பட இயக்குனர் சுகுமார் தற்போது ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது சொன்ன விஷயம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது எந்த ஒரு விஷயத்தை விட்டு விட நினைக்கிறீர்கள் என்று தொகுப்பாளர் கேட்டதற்கு, சினிமா என்று அவர் கூறியுள்ளார். அவர் சினிமாவை விட்டு விலகக் கூடாது என அருகில் இருந்த நடிகர் ராம்சரண் உட்பட பலரும் கூறியுள்ளனர். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.