ஆந்திரா மற்றும் கேரளாவை சேர்ந்த நடிகைகள் மட்டுமே அதிகம் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக தமிழகத்தை சேர்ந்த நடிகைகள் பல திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். அதன்படி திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட நடிகை ரம்யா பாண்டியன் சினிமாவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய சித்தப்பா அருண் பாண்டியன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தாலும் அவருடைய உதவியை நாடாமல் தனியாக வாய்ப்பு தேடி தன்னுடைய முயற்சியில் வெற்றியும் கண்டார்.
இவர் ஜோக்கர் திரைப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாகவும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தும் அசத்தினார்.இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்ற போதும் ரம்யா பாண்டியனுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பட வாய்ப்பு பிடிக்க போட்டோ சூட் நடத்துவதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.இதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கின. தற்போது இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் யோகா பயிற்சியாளர் லவல் தவான் என்பவரை காதலித்து வந்த நிலையில் அவருடன் சமீபத்தில் தான் திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு தனது கணவரோட ஹனிமூனுக்காக வெளிநாடு சென்றுள்ள ரம்யா பாண்டியன் தற்போது பேங்காங்கில் கிறிஸ்மஸ் கொண்டாடியுள்ளார். தனது கணவருடன் கிறிஸ்மஸ் கொண்டாடிய வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க