சிவக்குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த நடிகர் ஆவார். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த இவரது இயற்பெயர் பழனிசாமி என்பதாகும். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையாவார். 1965 ஆம் ஆண்டு “காக்கும் கரங்கள்” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் சிவக்குமார். தொடர்ந்து சரஸ்வதி சபதம் கந்தன் கருணை ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
“கந்தன் கருணை” திரைப்படத்தில் இவர் முருகன் கதாபாத்திரம் என்று நடித்திருந்தார். முருகனின் வேடம் அப்படியே சிவகுமாருக்கு கச்சிதமாக பொருந்தியது. அனைவரும் இவரை முருகனாக ரசித்தனர். தொடர்ந்து பல பக்தி படங்களில் நடித்தார் சிவக்குமார். திருமால் பெருமை காரைக்கால் அம்மையார் போன்ற இவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றது.
மேலும் ரோசாப்பூ ரவிக்கைக்காரி, ஆட்டுக்கார அலமேலு, இன்று நீ நாளை நான், சிந்து பைரவி, அக்னி சாட்சி, வெள்ளிக்கிழமை விரதம் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார் சிவக்குமார்.
சிவாக்குமார் தனது சினிமா வாழ்க்கையில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன், ஆர் முத்துராமன், ஏவிஎம் ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், மோகன், அர்ஜுன், அஜித்குமார், விஜய், விக்ரம், சூர்யா போன்ற அனைத்து நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இது மட்டுமில்லாமல் ராதிகாவுடன் இணைந்து சித்தி அண்ணாமலை போன்ற பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும் தோன்றியிருக்கிறார். சிவக்குமார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற வணங்கான் இசை வெளியீட்டு விழா மற்றும் “பாலா 25” விழாவில் கலந்து கொண்ட சிவகுமார் பாலாவை பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் காரைக்கால் அம்மையார் படத்தில் நான் இறுதியாக தகதகவென ஆடவா என்ற பாடலில் நடனமாடி இருப்பேன். அதில் நான் உயிரை கொடுத்து ஆடினேன். ஆனால் பாலா என் மகன் சூர்யாவை வைத்து இயக்கிய “பிதாமகன்” படத்தில் அந்த தகதக என்ற பாட்டை காமெடியாக ஆக்கிவிட்டார். என் மகனை வைத்து என்னை பழி வாங்கி விட்டார் பாலா என்று கூறியிருக்கிறார் சிவக்குமார்.