தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி வருகின்றன.
இந்நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி உள்ளிட்டோர் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பேசிய புகழேந்தி, நான் தவெகவில் இணையவில்லை. ஆனால், எம்ஜிஆர், அண்ணா போன்ற திராவிட தலைவர்களை முன்னிலைப்படுத்தும் விஜய்யை தூக்கிப்பிடிப்பதில் என்ன தவறு இருக்கிறது? என்று கூறியுள்ளார். விஜய்யின் தாக்கம் பயங்கரமாக இருக்கிறது. அவர் பின்னால் செல்லும் கூட்டம் பலருக்கு வேட்டாக மாறும் என்ரூ கூறியுள்ளார்.
