தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். சமையல் செய்யும்போது பூண்டை பயன்படுத்துகின்றனர். பூண்டில் உள்ள ஆக்சிஜனேற்றிகள், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பொருட்கள் உள்ளது. அவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பூண்டு சாப்பிடுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே உடல் ஆரோக்கியமாக இருக்கும். வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் உள்ளது.
காலையில் எழுந்தவுடன் பூண்டின் 2 அல்லது 3 பற்களை மென்று சாப்பிட்டால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இதனால் செரிமான சக்தி அதிகரிக்கும். தொடர்ந்து பூண்டை சாப்பிட வேண்டும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பூண்டு அதிகரிக்கும். மேலும் சளி மற்றும் இருமல் ஏற்படும் வாய்ப்பு இருந்தால் பூண்டு அதிலிருந்து விடுபட உதவும். பூண்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் மிக வேகமாக உறிஞ்சப்படும். தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
