காலையிலேயே ஷாக்..! “இபிஎஸ்-ஐ நாங்கள் நீக்குவோம்” பரபரப்பை கிளப்பிய அதிமுகவின் முக்கிய புள்ளி…!!

By Soundarya on புரட்டாதி 7, 2025

Spread the love

செங்கோட்டையன் நேற்று மனம்திறந்து பேசியபோது, பிரிந்தவர்களை ஒன்றிணைக்க 10 நாள் கெடு விதிக்க, அதற்கு பதிலாக இன்று அவரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து EPS நீக்கினார். இதனால் அரசியல் களம் பரபரப்பாகவே உள்ளது.  அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கியதற்கு சசிகலா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் புகழேந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது செங்கோட்டையனை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்த அவர், EPS ஒன்றும் அதிமுகவுக்கு சொந்தக்காரர் அல்ல.  மேலும் தங்கமணியும், வேலுமணியும் சேர்ந்து எடப்பாடியை இயக்குவதாக சாடினார். அத்துடன், உண்மையான அதிமுகவின் தொண்டர்கள் செங்கோட்டையன் பக்கம் நிற்பதாக கூறிய அவர், நாங்கள் அனைவரும் சேர்ந்து பழனிசாமியை ஓரம் கட்டுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.