தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள் பலரும் இபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ளனர்.
அதன் வெளிப்பாடாக நேற்று முன்தினம் செங்கோட்டையன் இபிஸ்க்கு எதிராக திரும்பி அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என பத்து நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இபிஎஸ் நேற்று ஆலோசனை நடத்தி செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளார். அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் பிரிந்து சென்றவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற செங்கோட்டையன் மீது இபிஎஸ் எடுத்த நடவடிக்கை அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனின் கட்சிப் பொறுப்புகள் பிடுங்கப்பட்டுள்ளது எதிர்பாராதது என கூறுகின்றன. என்னதான் இருந்தாலும் கட்சித் தலைமைக்கு கேடு வைப்பது ஏற்க முடியாதது என்றும் நடவடிக்கைக்கு முன்பு விளக்கம் கேட்டு இருக்கலாம் என்றும் விவாதம் எழுந்துள்ளது. இதனால் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் இருப்பதால் இபிஎஸ் தற்போது புதிய சிக்கலில் சிக்கியுள்ளார்.
