நாம் உண்ணும் உணவில் கண்டிப்பாக கருவேப்பிலையை இடம் பெற்று இருக்கும். கருவேப்பிலை தனித்துவமான இடத்தில் உள்ளது. வாசனை மற்றும் சுவையை உணவில் அதிகப்படுத்தும். அதேபோல் கறிவேப்பிலையை நாம் உண்பதற்கு மட்டும் பயன்படுத்துவதில்லை. கருவேப்பிலையில் நிறைய நன்மைகள் உள்ளது. கருவேப்பிலையை நாம் சாப்பிட்டால் செரிமான ஆற்றலை அதிகப்படுத்தும். கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்தும். உடல் எடையை கட்டுப்படுத்தும். கருவேப்பிலை நீரில் அக்ஸிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் செரிமான பிரச்சனையை போக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதேபோல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துமாம். அக்ஸிஜனேற்றிகள் உடலில் உள்ள ஃப்ரீரேடிக்கல்களை எதிர்த்து போராடி புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. கருவேப்பிலை நீரை தொடர்ச்சியாக பருகி வந்தால் இடை இழப்பிற்கு பெரிதும் உதவுகிறதாம், கூந்தல் வளர்ச்சியையும் தூண்டுமாம், நரை முடி வராமல் தடுக்குமாம், கூந்தலை பளபளப்பாகவும், துடிப்பாகவும், மீள்தன்மையுடனும் வைத்துக் கொள்ளுமாம். கருவேப்பிலை நீர் குடல் இயக்கத்தை ஊக்குவித்து செரிமான அமைப்பை தூண்டுகிறதாம். குடலில் ஏற்படும் கடுமை யான அல்லது திடீர் விளைவுகளை ஏற்படுத்தாமல் மலச்சிக்கலை போக்குவதில் சிறப்பாக செயல்படுவதுடன் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துமாம்.
