குஷியோ குஷி… அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… தீபாவளிக்கு வருகிறது டபுள் போனஸ்…!

By Nanthini on புரட்டாதி 7, 2025

Spread the love

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கின்றது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற சம்பளதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் மூன்று சதவீதம் அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது. இது குறித்த முடிவு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் அகவிலைப்படி குறித்த முடிவு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக எடுக்கப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வு தீபாவளி பண்டிகைக்கு முன் வரலாம். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தற்போது 50 சதவீதமாக உள்ளது. இது 58 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த அதிகரிப்பு 2025 ஜூலை மாதம் முதல் செயல்படுத்தப்படும். இந்த காலகட்டத்தில் அக்டோபர் மாத சம்பளத்துடன் மூன்று மாத நிலுவை தொகையும் வழங்கப்படும் என மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.