மகளிர் உரிமைத் தொகை புதிதாக விண்ணப்பிப்போருக்கு முக்கிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. தற்போது மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பித்தும் வராதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். தற்போது மாவட்ட வாரியாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது . அதில் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். எனவே அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலிக்க குறிப்பிட்ட காலம் தேவைப்படுவதால், விண்ணப்பங்களுக்கு பதில் வருவதற்கு தாமதம் ஏற்படலாம் என்று அரசு கூறியுள்ளது.
சில சமயங்களில் விண்ணப்பிப்போர் சில ஆவணங்களை தவறாக கொடுப்பதால் சரிபார்த்து பணியை முடிக்க சிரமம் ஏற்பட்டு வருகிறது. விண்ணப்பித்தும் பதில் வரவில்லை என்று பயப்பட வேண்டாம். விண்ணப்பம் சரிபார்த்து ஏற்றுக் கொள்ளப்பட்டாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ உங்களுடைய மொபைலுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். நீண்ட நாட்கள் ஆகியும் பதில் வரவில்லை என்றால் அருகில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பத்தின் நிலை குறித்து விசாரித்துக் கொள்ளுங்கள் மற்றும் விண்ணப்பத்தின் நகலை எடுத்துச் செல்வது முக்கியம்..
