தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த பழம்பெரும் நடிகையாக இருந்தவர் தான் நடிகை மனோரமா. தமிழ் திரையுலகால் தமிழ் திரைப்பட ரசிகர்களால் நடிகை மனோரமா அவர்கள் ஆட்சி என்று அன்போடு அழைக்கப்பட்டார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவரின் உண்மையான பெயர் கோபி சாந்தா. இவர் 12 வயதில் நடிப்பு தொழிலில் இறங்கினார். நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜனாகிய ஒரு தான் இவருக்கு மனோரமா என்று பெயர் வைத்தனர். இவர் ஆரம்பத்தில் வைரம் நாடக சபா நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.
முதன்முதலாக மனோரமா மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழி திரைப்படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்தார். பிறகு பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தார். இவருடைய இறப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் கதிகலங்க வைத்தது. இவருடைய இறப்பு தற்போது வரை கூட யாராலும் ஈடு கட்ட முடியாது. நடிகை மனோரமா அவர்கள் தேசிய விருது, பத்மஸ்ரீ விருது மற்றும் டாக்டர் பட்டம் போன்ற பல விருதுகளை தன்னுடைய நடிப்பு திறமைக்கு வாங்கியுள்ளார். இவர் இதுவரை 1500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனால் இவருடைய பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தென்னிந்தியாவில் உள்ள பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா உலகையே அண்ணாந்து பார்க்க வைத்தவர். இவர் நாடகங்களில் நடித்த எம் எஸ் ராமநாதன் என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி 1964 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற மனோரமா தனது கைக்கு குழந்தையுடன் அம்மா வீட்டிற்கு சென்று பிறகு அங்கு தான் தனிமையில் வாழ்ந்து வந்தார். இவருடைய மகன் பூபதி சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மறைந்த மனோரமா குறித்து தயாரிப்பாளர் முக்தா ரவி ஒரு பேட்டியில் பேசுகையில், மனோரமா சிறு வயதிலிருந்தே மிகவும் கஷ்டத்தில் தான் வளர்ந்தாங்க. உடுத்த துணி கூட இல்லாம கஷ்டப்பட்டாங்க. சாப்பாட்டுக்கு கூட வழி இருக்காது.
மனோரமா சிறு வயதிலேயே நல்லா பாடுவாங்க ஆடுவாங்க என்பதால் அவங்க அம்மா நாடகத்தில் சேர்த்து விட்டுட்டாங்க. கலைஞர் கருணாநிதி மற்றும் கனிமொழி உள்ளிட்டோருடன் நாடகங்களில் நடித்துள்ளார். வீரய்யா என்பவர் தான் முதன் முதலில் மனோரமாவை அழைத்து வந்து சினிமாவில் நடிக்க வைத்தார். அன்று சினிமாவின் மனோரமாவின் வாழ்க்கையை மாற்றியது அவர்தான். தமிழ் சினிமாவில் நாகேஷ் மற்றும் மனோரமா காம்போ என்பது நன்றாகவே இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விட்டனர்.
அதற்கு முக்கிய காரணம் நாகேஷ் உறவினர் ஒருவரின் கொலை வழக்கில் மனோரமாவை பொய்யாக நாகேஷ் சாட்சி கூற சொன்னார். சரி என்று நீதிமன்றத்திற்கு சென்ற மனோரமா அங்கு சென்றதும் ஒரு புத்தகத்தை வைத்து நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் வாங்கிய பிறகு உண்மைக்கு கட்டுப்பட்ட மனோரமா அனைத்து உண்மைகளையும் கூறிவிட்டார். கிராமப்புறங்களில் பிறந்தவர் என்பதால் உண்மைக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடிய மனோரமா பொய் கூறிவிட்டால் தன்னுடைய சந்ததிகளுக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்ற பயத்தில் அத்தனை உண்மைகளையும் கூற அது ஒரு கட்டத்தில் நாகேஷுக்கு எதிராக அமைந்து அவரை பெரும் சிக்கலில் தள்ளி விட்டது. இதனால்தான் இருவரும் பிரிந்தனர் என்று முக்தா ரவி அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…