Categories: சினிமா

கரகாட்டக்காரன் படமே அந்த படத்தின் காப்பி தான்.. பல வருட உண்மையை உடைத்த இயக்குனர் கங்கை அமரன்..!

Spread the love

தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடிக் தீர்த்த திரைப்படங்களில் ஒன்றுதான் கரகாட்டக்காரன். கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் மற்றும் கோவை சரளா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் ராமராஜனுக்கு சினிமா தெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை பல ஊர்களில் 200 நாட்களுக்கும் மதுரை போன்ற ஊர்களில் 350 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் போட்டி ரசித்தனர்.

தமிழ் சினிமா மறக்க முடியாத திரைப்படங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக இந்த படத்தில் கவுண்டமணி, செந்தில் மற்றும் கோவை சரளா குழுவினர் காமெடியில் பட்டையை கிளப்பி இருப்பார். தமிழ் சினிமா உலகில் காமெடியில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்திய திரைப்படம் தான் இது. அந்த அளவிற்கு ஐகானிக் காமெடி சீன்கள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தன. இனி யாரும் இது போன்ற ஒரு படத்தை எடுக்கவும் முடியாது. ஆனால் இந்த படமே ஒரு படத்தின் காப்பி என்று இத்தனை வருடங்கள் கழித்து இயக்குனர் கங்கை அமரன் உண்மையை உடைத்துள்ளார்.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கை அமரன், கரகாட்டக்காரன் நீங்கள் பார்த்து ரசித்த தில்லானா மோகனாம்பாள் படத்தில் காப்பி தான். அங்கு நாட்டியம் எங்கு கிராமப்புற கரகாட்டம், அவ்வளவுதான் வித்தியாசம். அந்தப் படத்தில் பாலைய்யா பேசிய வசனத்தை தான் ஊரு விட்டு ஊரு வந்து பாடலாக செய்தேன். அந்தப் படத்தில் பாடல் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவில்லை. ஆனால் நாங்கள் பாடல் வைத்தோம்.

படமும் சூப்பர் ஹிட் ஆனது என்று கங்கை அமரன் பேசியுள்ளார். சிவாஜி மற்றும் பத்மினி ஜோடிக்கு காலத்தால மறக்க முடியாத திரைப்படம் தான் தில்லானா மோகனாம்பாள். இந்தப் படத்தின் பல சிறப்பம்சங்களையும் கரகாட்டக்காரன் படத்திலும் காணலாம். சிவாஜுக்கு பதில் இங்கு ராமராஜனும் பத்மினிக்கு பதில் கனகாவும் நடித்திருந்தனர். இரண்டு படத்திலும் ஒவ்வொருவரின் கதாபாத்திரத்தையும் நன்கு கவனித்தால் இதனை புரிந்து கொள்ளலாம்.

Nanthini

Recent Posts

“பிள்ளையைக் கிள்ளி விட்டு.. தொட்டிலை ஆட்டும் ட்ரம்ப்”…. அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த ‘செங்கடல்’ எச்சரிக்கை… அடுத்த சில நாட்களில் நடக்கப்போவது இதுதான்…!

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…

50 seconds ago

வார்த்தை கூறி 180 சிறுமிகளை சீரழித்த காம கொடூரன்… 350 ஆபாச வீடியோக்கள்… ‘ஸ்னாப்சாட்’ சைக்கோ சிக்கியது எப்படி?… மகாராஷ்டிராவை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…

6 minutes ago

“30,000 கோடி ஆடியோ விவகாரம்”… ஸ்டாலினுக்கு குஷ்பு விடுத்த பகிரங்க சவால்… திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…

13 minutes ago

சீனா கொடுத்த ‘பிக்பாட்’ ட்விஸ்ட்!… ஜி ஜின்பிங் சொன்ன ‘அந்த ஒரு வார்த்தை’… ஈரானுக்கு டிரம்ப் வைத்த செக்… அதிர்ந்து போன உலக நாடுகள்…!!

பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…

18 minutes ago

மூச்சுத் திணறும் உலகப் பொருளாதாரம்… வெறும் 21 மைல் கடற்பரப்பால் அழியப்போகும் வல்லரசு நாடுகளின் கனவு!… இந்தியாவை நிலைகுலையச் செய்யும் அமெரிக்காவின் இந்த ஒரு முடிவு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…

21 minutes ago

“ஒரே ஒரு ரோடு ஷோ… மொத்த சென்னையும் தட்டிதூக்கிய விஜய்”… தலைநகரில் தலைகீழாக மாறும் தேர்தல் களம்….!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி ஆளுங்கட்சியான…

27 minutes ago