Categories: சினிமா

சங்கிலியை எடுத்தாதான் படத்துல நடிக்கவே வருவேன்.. ஜெமினி ஸ்டுடியோவை அலறவிட்ட NS கிருஷ்ணன்..!

Spread the love

கிளாசிக் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர் மற்றும் பாடகர் என்று தனக்கு என்று ஒரு தனி அடையாளத்தை பெற்றவர் தான் என் எஸ் கிருஷ்ணன். கடந்த 1908 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி நாகர்கோவிலில் பிறந்த இவர், 1935 ஆம் ஆண்டு வெளியான மேனகா என்ற திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து எம்ஜிஆரின் அறிமுக திரைப்படமான சதிலீலாவதி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். அதே சமயம் தன்னுடைய நகைச்சுவை மூலமாக சமூகத்திற்கு தேவையான கருத்துக்களையும் வைத்து அசத்தியவர்.

கலைவாணர் என்ற பட்டத்தோடு வலம் வந்த இவர் நகைச்சுவை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்தாமல் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார். அதனைப் போல வயசாக நடிகர் நடிகைகளுடனும் அன்பாகவும் நட்பாகவும் பழகும் வழக்கத்தை வைத்திருந்த இவர் சினிமாவில் பல பஞ்சாயத்துகளையும் தீர்த்து வைக்கும் அளவுக்கு பிரபலமாக இருந்தார். கடந்த 1941 ஆம் ஆடு வெளியான மதன காமராஜன் என்ற திரைப்படம் மூலமாக சினிமாவுலகில் அடி எடுத்து வைத்த ஜெர்மனி நிறுவனம் பல திரைப்படங்களை தயாரித்துள்ளது.

ஜெமினி ஸ்டூடியோவில் நடிகராக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் நேரடியாக ஸ்டூடியோவுக்கு காரில் சென்று விட முடியாது. அதாவது ஸ்டூடியோவின் வாசலில் ஒரு சங்கிலி கட்டப்பட்டிருக்கும். அங்கேயே காரை நிறுத்திவிட்டு ஸ்டூடியோவுக்கு உள்ளே நடந்து தான் செல்ல வேண்டும். இதனிடையே ஜெமினி நிறுவனம் தயாரிப்பில் 1943 ஆம் ஆண்டு மங்கம்மா சபதம் என்ற வசுந்தரா,ராஜன் மற்றும் டி ஏ மதுரம் ஆகிவருடன் என் எஸ் கிருஷ்ணன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படப்பிடிப்புக்காக என் எஸ் கிருஷ்ணன் காரில் வந்த போது ஜெமினி ஸ்டூடியோவின் காவலாளி அவரை தடுத்து நிறுத்தி இந்த காரை இங்கு விட்டுவிட்டு உள்ளே நடந்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

ஏன் என்று கேட்க இது முதலாளி உத்தரவு என காவலாளி கூறிய நிலையில் இதனைக் கேட்ட என் எஸ் கிருஷ்ணன் இந்த சங்கிலியை எடுத்தால்தான் நான் இந்த படத்தில் நடிக்க வருவேன் என்று முதலாளியிடம் சொல்லிவிடுங்கள் என கூறிவிட்டு காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இந்த தகவல் எப்படியோ உடனடியாக ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ் எஸ் வாசனைக்கு செல்ல அதிர்ச்சியான அவர் உடனடியாக தனது முடிவை மாற்றிக் கொண்டு அங்கு சங்கிலி போடுவதை நிறுத்திக் கொண்டு அனைவரும் காரில் உள்ளே வர அனுமதி வழங்கினார். அதன் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்ட என் எஸ் கிருஷ்ணன் அந்த படத்தில் நடித்து முடித்தார்.

Nanthini

Recent Posts

அடியாத்தி…! என்ன இது…? ஒரே காரில் 16 பேர்…! டிக்கி வரை ஆட்களை அடைத்து அட்டூழியம்… அதிகாரிகளின் ஊழலை தோலுரித்த கார் ஓட்டுநர்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

உத்தராகண்ட் போன்ற மலைப் பகுதிகளில் போதிய அரசுப் பேருந்து வசதிகள் இல்லாததால், டெல்லி-என்சிஆர் வரை இயங்கும் தனியார் டேக்ஸிகளையே மக்கள்…

5 minutes ago

“என்னை தொந்தரவு பண்றாங்கம்மா…” ரயிலில் பயணித்த போதே போனில் அழுத இளம்பெண்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… வைரலாகும் வீடியோ…!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பி. பரூவா கல்லூரியில் படித்து வந்த ஹிமாஸ்ரீ போரா என்ற மாணவி, விசாகப்பட்டினத்தில் இருந்து…

18 minutes ago

எங்கள காப்பாத்துங்க…! அத்துமீறி நுழைந்த மர்ம கும்பல்… கர்ப்பிணி பெண்ணை தாக்கியதால் கருசிதைவு… எல்லாரையும் தாறுமாறாக தாக்கிய நபர்கள்… அச்சத்தில் இருக்கும் மக்கள்…!!

கோடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு நிகழ்ந்த கொடூரத் தாக்குதல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 20…

20 minutes ago

“வேலைக்குப் போ”சொன்னது ஒரு குத்தமா?…அண்ணன் – தம்பிக்குள் நடந்த வாக்குவாதம்… தம்பி செய்த கொடூர காரியம்… பரிதாபமாக பறிபோன உயிர்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

குஜராத்தின் டாங் மாவட்டத்தில், வேலையில்லாமல் இருந்த அண்ணனைத் தொழில் தொடங்குமாறு கூறிய தம்பி, வாக்குவாதம் முற்றி அவரை அடித்துக் கொன்ற…

29 minutes ago

பெண்களே இப்படியா?… “உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்”… போலீசை மிரட்டிய பெண்… மதுபோதையில் தகராறு… சாலையில் பெரும் பரபரப்பு…!!

மதுபோதையில் நிலைகுலைந்த பெண் ஒருவர் நடுரோட்டில் கடுமையான ரகளையில் ஈடுபட்டு அப்பகுதியையே ஸ்தம்பிக்க வைத்தார். அவ்வழியே சென்ற பொதுமக்களை வலுக்கட்டாயமாகத்…

37 minutes ago