விஜய் அப்படி பண்ணுவாருன்னு நினைக்கல.. ஒரு நிமிஷம் கண் கலங்கிருச்சு.. உருக்கமாக பேசிய தயாரிப்பாளர்..!!

By admin on ஆவணி 9, 2024

Spread the love

தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கூலி, மாண்புமிகு மாணவன், வேட்டையாடு விளையாடு, சீனு உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளார். அது மட்டுமில்லாமல் ஸ்ரீரங்கத்து தேவதைகள், வாழ்க்கை, அலை ஓசை உள்ளிட்ட சீரியல்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மாணிக்கம் நாராயணன் கூறியதாவது, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜயை வைத்து நான் படம் எடுத்து இருக்கேன்.

உயிருடன் இருக்கும்போது உதவாத தயாரிப்பாளர்கள் சங்கம்-மாணிக்கம் நாராயணன்  ஆதங்கம் – Tamil Cinema Box Office

   

எப்போதும் அவர் மீது எனக்கு மரியாதை இருக்கு. பிரபல காமெடியான வடிவேலுவை வைத்து இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தை எடுத்தேன். அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்தேன் இதற்காக விஜய் வருவார் எனக் கூறி சூர்யாவிடம் அனுமதி வாங்கிவிட்டேன். அவரும் வருகிறேன் என்று சொல்லிவிட்டார்.

   

Vijay - தயாரிப்பாளரை கெஞ்சவிட்டு அழ வைத்த விஜய்.. என்ன நடந்தது தெரியுமா? |  Producer Manickam Narayanan shares Memories About Vijay - Tamil Filmibeat

 

இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜயை அழைக்க சென்றேன். அப்போது விஜய் என் கையை பிடித்து மீடியாவில் நான் பேசியது சர்ச்சையாக இருக்கிறது. என்னால் இசை வெளியீட்டு விழாவிற்கு வர முடியாது என கூறினார். இதனால் என்ன செய்வது என்று அறியாமல் உடனே சூர்யாவிடம் சென்று பேசினேன். அவர் வருவதாக கூறினார்.

Thalapathy 65's first look to be released on the eve of Vijay's birthday |  Filmfare.com

அதன் பிறகு இசை வெளியீட்டு விழா நடந்து கொண்டிருந்த போது திடீரென ஒரு வேன் வந்து நின்றது. யார் என்று பார்த்தால் விஜய் அந்த வேனில் இருந்து இறங்கி வந்து என்னை கட்டிப்பிடித்து சமாதானப்படுத்தினார். அவரைப் பார்த்தவுடன் நான் அழுதுவிட்டேன். விஜய் எனக்கு செய்த உதவியை என்னால் மறக்கவே முடியாது என உருக்கமாக பேசியுள்ளார்.

Balaji's Thots: Coming Soon - Indiralogathil Na. Azhagappan