சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் டி.ஆர்.பி-யில் சார்ட் லிஸ்டில் இருக்கும் சீரியல் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மல்லி:
சன் டிவியில் ஒளிபரப்பாகும் வள்ளி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 7.44 புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. ஹீரோவான விஜய் தனது மகள் வெண்பாவிற்காக மல்லியை மனைவியாக நடிக்க வைத்துள்ளார். நடிக்க வந்த மல்லி வெண்பா மீது அதிக பாசம் வைத்துள்ளார். விஜய் குடும்பத்தில் உண்மையிலேயே விஜய்க்கும் மல்லிக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என நினைக்கின்றனர். கதிரேசன் அதனை தடுக்க சதி செய்கிறார் தினமும் விறுவிறுப்பான எபிசோடுகளுடன் மல்லி சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது.

வானத்தைப்போல:
அண்ணன் தங்கையின் பாசத்தை எடுத்துரைக்கும் சீரியல்தான் வானத்தைப்போல. இந்த சீரியலை வருகிற 17-ஆம் தேதி முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். வில்லியான பொன்னி அண்ணனையும் தங்கையும் பிரித்து வைக்கிறார். டிஆர்பி ரேட்டிங்கில் 7.65 புள்ளிகள் பெற்று வானத்தைப்போல சீரியல் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதுவரை வானத்தைப்போல சீரியல் 1100 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

மருமகள்:
மருமகள் சீரியல் ஹீரோ பிரபுவும் ஹீரோயின் ஆதிரையும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர். பிரபு ஆதிரையும் பெண் பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சியாகின்றனர். அடுத்து என்ன நடக்கப் போகும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றன. டி.ஆர்.பி ரேட்டிங்கில் மருமகள் சீரியல் 8.27 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.

கயல்:
கயல் தனது குடும்பத்திற்காக போராடுகிறார். ஜாதகம் பிரச்சனை தொடங்கி இப்போது எழிலை எந்த காரணத்திற்காகவும் விட்டு கொடுக்கக் கூடாது என கயல் முடிவு செய்துள்ளார். இனிவரும் நாட்களில் கயலின் திருமணமும், அதனை தடுக்க அதிகாரங்கள் செய்யும் வேலையையும் பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் 8.76 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

சிறகடிக்க ஆசை:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தினமும் விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. ரோகிணி எப்படியாவது கர்ப்பமாக வேண்டும் என முயற்சி செய்கிறார். அப்போதுதான் மனோஜ் மற்றும் அவர்கள் குடும்பத்தினரிடையே நல்ல வாழ்க்கை கிடைக்கும் என யோசிக்கிறார். ரோகினி பல்வேறு விஷயங்களில் ஏமாற்றி வருகிறார். 8.86 புள்ளிகளை பெற்று சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

சிங்கப்பெண்ணே:
டிஆர்பி ரேட்டிங்கில் 9.11 புள்ளிகள் பெற்று சிங்க பெண்ணே சீரியல் முதல் இடத்தில் உள்ளது. இதுவரை அடங்கிப்போன ஆனந்தி மித்ரா மற்றும் கருணாகரனுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். இப்போது ஆனந்தி கிராமத்தில் நடக்கும் திருவிழாவிற்காக மகேஷ், அன்பு, ஹாஸ்டல் வார்டன் உள்ளிட்ட அனைவரும் கிளம்பி செல்கின்றனர். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

