ஏம்மா இந்த மாதிரி பண்ணுனீங்கன்னு என் பசங்க என்ன பார்த்து கேட்டுற கூடாது.. மனம் திறந்து பேசிய நடிகை ரம்பா..!!

By admin on ஆவணி 9, 2024

Spread the love

90’s காலக்கட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ரம்பா. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். முதன்முதலில் ரம்பா கடந்த 1992-ஆம் ஆண்டு மலையாளத்தில் ரிலீசான சர்கம் திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 15. தமிழில் உழவன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

   

ரம்பா டான்ஸ் ஆடிய அழகிய லைலா என்ற பாடல் இன்றும் ரசிகர்களால் அதிகம் கேட்கப்படுகிறது. கடந்த 2010- ஆம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை ரம்பா திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். ரம்பாவுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் ரம்பா தனது கணவருடன் இணைந்து பேட்டி கொடுத்துள்ளார்.

   

 

அவர் கூறியதாவது, நான் பர்ஸ்ட் சினிமாவை லவ் பண்ணினேன். சினிமாவால தான் எனக்கு நல்ல ஹஸ்பண்ட், குழந்தைகள் கிடைச்சிருக்காங்க. எனக்கு பிடிச்ச மாதிரி கதை இருந்தா நடிப்பேன். எல்லாமே பண்ணிட்டேன். நான் நடிக்கணும்னா நல்ல கேரக்டர் இருக்கணும். நல்ல கதை கிடைக்கணும். நாளைக்கு என் பசங்க அந்த படத்தை பார்க்கும்போது அம்மா இந்த மாதிரி ரோல் பண்ணிட்டாங்களே அப்படின்னு என்னை பார்த்து கேட்க கூடாது. சின்ன வயசுல நான் நடிச்ச படங்களை என் பசங்க பாத்து இருக்காங்க. எங்க அம்மா ஒரு பெரிய ஆக்டர் அப்படின்னு நினைப்பாங்க.

Ramba

இப்போ அவங்க படம் பார்க்கும்போது அம்மா இப்படி பண்ணிட்டாங்கன்னு நினைக்க கூடாது. அவங்களுக்கு பெருமையா இருக்கணும். அப்படி ஏதாவது ரோல் இருந்தா கண்டிப்பா நான் பண்ணுவேன். எனக்கு பிடிக்கணும். ஆடியன்ஸ் எல்லாருக்கும் பிடிக்கணும். என்னோட சாங்ஸ் நிறைய சோசியல் மீடியால ஓடிட்டே இருக்கும். நாங்க ஃபேமிலியோட உக்காந்து பார்ப்போம். பிறந்த ஊரிலேயே நான் நல்ல நடிகையின் பெயர் வாங்கி இருக்கேன் அதே மாதிரி ஒரு business entrepreneur-ன்னு பேர் வாங்கணும்னு எனக்கு ஒரு ஆசை இருக்கு என ஓப்பனாக பேசி உள்ளார்.